முஹம்மது நியாஸ்:
சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி நகரில் அத்வைதம் என்னும் வழிகேட்டையும், அதனோடு சேர்ந்த இன்னபிற மார்க்க விரோதச் செயற்பாடுகளையும் விதைத்து அதனை இவ்வூரின் பிரதான பேசுபொருளாகவும், பகிரங்க மேடைகள் அமைத்து பொதுமக்களுக்கு அதன் தீங்கைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவைப்பாடாகவும் வளர்த்து விட்ட பெருமையும் புகழும் அப்துர் ரவூப் மௌலவியையே சாரும்.காத்தான்குடியில் 35 வருடங்களாக வேரூன்றியுள்ள இந்த அத்வைதச் சிந்தனையானது, இலங்கை நாட்டில் விடுதலைப் புலிகளின் கொடூர வரலாற்றினை விடவும் தொன்மை வாய்ந்த கொடிய நோயாகும்.
இவ்வாறு பன்னெடுங்காலமாக பல்வேறு கட்டங்களைத் தாண்டி இப்பிரதேச மக்களின் இறை நம்பிக்கையெனும் ஈமானிய உணர்வுகளுக்கும், செயற்பாடுகளுக்கும் ஈனத்தனமாக வேட்டு வைத்து அவர்களின் ஈருலக வாழ்வினையும் பாழாக்கி நிற்கின்ற இந்தப் பகிரங்க வழிகேட்டுக்கு எதிராக தற்காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியிலுள்ள பல இளம் உலமாக்களால் பல சவால்களுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு முடியுமானளவு தெளிவுரைகள் வழங்கப்பட்டு வருவதன் காரணமாக அதிகமான பொதுமக்கள் அவ்வழிகேட்டின் பக்கமிருந்து தங்களை மீட்டுக்கொள்பவர்களாக மாறியுள்ளார்கள்.
அதேநேரம் அப்துர்ரவூப் மௌலவியின் அத்வைதக் கொள்கை கோட்பாடுகளை, இவ்வூர் மக்களின் ஈமானிய நம்பிக்கையின் மீது அவர் சிந்தனாரீதியாக வளர்த்து விட்டு அடந்தேறியுள்ள அநீதிகளைத் தட்டிக் கேட்டும், பகிரங்கமாக மக்கள் மன்றத்திற்கு வரும்படி விவாத அழைப்புக்களை விடுத்தும் வருகின்ற இந்த இஸ்லாமிய தஃவா அமைப்புக்களும், இளம் உலமாக்களும் சுமார் எட்டு வருடங்களாக இம்மண்ணில் மக்கி உக்கிப் மண்ணோடு மண்ணாகிப்போயிருந்த இந்த அத்வைத சிந்தனைக்கு மீண்டும் புத்துயிரளித்த நமதூரின் ஆளும்தரப்பு அரசியல் ஜாம்பவான்களின் அப்பட்டமான கயமைத்தனங்களையும், இவ்வூரைப் பிரித்தாளுகின்ற நயவஞ்சகத் துரோகத்தனங்களையும் ஏனோ கண்டு கொள்ளத் தவறி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
2004களில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் தலைவராக இருந்த நமது மண்ணின் மைந்தன் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ், அப்துர் றவூப் மௌலவியின் சார்பான பிரதிநிதிகளை அங்கு வரவழைத்து, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாப் பிரதிநிதிகளுடன் அவர்களைத் தனியறைக்குள் அமர வைத்து, எதிர்காலத்தில் தனது அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் சொந்த சுயநல அரசியல் ஆதாயத்திற்காக மந்திராலோசனைகளை நடாத்தி, இருதரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், சமாதானமாகி விட்டதாகவும் கதையலங்காரங்களைக் கட்டவிழ்த்து விட்ட வரலாறுகளை நாம் மறந்து விட முடியாது.
இந்தப் பிண்ணனியில் நாடு கடந்து வாழ்ந்து வந்த அப்துர் றவூப் மௌலவியை மீண்டும் இவ்வூருக்குள் அழைத்து வந்து முஹைதீன் மெத்தைப்பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆத் தொழுகையில் முன் வரிசையில் அவரை உட்கார வைத்து, இரு தரப்பு உலமாக்களையும், இவ்வூர் மக்களையும் ஒன்று சேரச் செய்து, இன்று வரை இவ்வூரில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒட்டுமொத்த மக்களினதும் ஈமானுக்கே வேட்டு வைக்கும் விதமாக விளையாடி வருகின்ற படுபாதகச் செயலைப் புரிவதற்குத் தூபமிட்டும், அக்கபட நாடகத்தை இம்மண்ணில் கனகச்சிதமாக அரங்கேற்றிப் பாதுகாத்துப் போஷித்தும் வருகின்ற சூத்திரதாரிகள் நமதூரின் ஆளுந்தரப்பு அரசியல் அதிகாரவாதிகளே என்பதையும் யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
இஸ்லாமிய நகரமென்றும், மார்க்க விழுமியங்களின் உறைவிடம் என்றும் போற்றிப் புகழப்படுகின்ற காத்தான்குடி நகரில் அந்த அத்வைதக் கொள்கையாளர்களையே மீண்டும் இந்த மண்ணில் தூக்கி நிறுத்தி அவர்களுக்கு அரசியல் மற்றும் சமூக அங்கீகாரங்களையும் ஜனநாயகத் தேர்தல்கள் என்ற போர்வையில் தந்திரோபாயமாகப் பெற்றுக் கொடுத்ததுடன் நில்லாது, அற்ப அரசியல் அதிகாரங்களைப் பெறுவதற்காக இந்த ஊரின் தலையெழுத்தையே மாற்றி எழுதுகின்ற ஓர் சக்தியாகவும் அவர்களை வரலாற்றில் உருவாக்கி, இறுதியில் இவ்வூரின் ஒற்றுமைக்காக தமது தவிசாளர் அந்தஸ்தினையே விட்டுக் கொடுத்ததாகவும் போலி நாடகங்களை மேடையேற்றி அற்புதமாக நடித்து வருகின்ற அந்த அத்வைத அரசியல் ஞானி(?)களுக்கு இன்றளவிலும் ஆடுகளம் அமைத்துக் கொடுத்திருப்பவர்களும் நமதூரின் செல்வாக்கிழந்துபோன ஆளுந்தரப்பு அரசியல் அதிகாரவாதிகளேதான் என்பதும் வெள்ளிடைமலையான விடயமாகும்.
கேவலம், இச்சாக்கடை அரசியல் களத்தில் தமது அதிகார இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, சரிந்து போய்விட்ட தமது வாக்கு வங்கிகளைத் தூக்கி நிறுத்திச் மீண்டும் சீர் செய்வதற்காக, காலாதி காலமாக இவ்வூருக்கே சாபக்கேடாக இருந்து வருகின்ற இந்த அத்வைத சிந்தனையாளர்களைப் புத்துயிரூட்டி இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலேயே அம்பு விட்டு விளையாடிக் கொண்டிருக்கின்ற இந்த சமய, சமூக விரோதச் செயற்பாடுகளின் ஏக போகச் சொந்தக்காரர்களும் நமதூர் ஆளுந்தரப்பு அரசியல் அதிகாரவாதிகள்தான் என்றால் அதிலும் மிகையேதும் கிடையாது.
சிங்களப் பேரினவாதிகளால் தகர்க்கப்படுகின்ற பள்ளிவாயில்களின் விடயத்தில், அவிழ்த்தெறியப்படுகின்ற முஸ்லிம் சகோதரிகளின் ஆடைகள் விடயத்தில் கேவலத்திலும் கேவலம் ஓர் கண்டன அறிக்கையைத்தானும் விடுவதற்கு வக்கில்லாத, முதுகெலும்பற்ற கோழைத்தனமான அரசியல் நடாத்துகின்ற இந்த ஆளுந்தரப்பு அதிகாரவாதிகளுக்கு, காத்தான்குடியிலுள்ள அப்துர் ரவூப் மௌலவியுடைய கொள்கைத்தளமான பதுரியாவிற்கு மட்டும் அரசியல் பிரமுகர்களையும், ஷெய்ஹு, ஸெய்யதுமார்களையும், இன்னும் பல வெளிநாட்டு ராஜதந்திரிகளையும் அழைத்து வந்து இவர்களையும், இவர்களது கொள்கை கோட்பாடுகளையும் அறிமுகப்படுத்தி மறுபிறப்புச் செய்வதற்கு இந்த அரசியல் அதிகாரவாதிகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற தேவைப்பாடுதான் என்ன?
தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மாப் பள்ளிவாயில் பட்டப்பகல் வேளையில் சிங்களப் பேரினவாதிகளால் ஆக்ரோஷமாகத் தகர்த்தெறியப்பட்ட போது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த இந்த ஆளுந்தரப்பு அரசியல் சுயநல அதிகாரவாதிகள், அதற்கு முன்னின்று செயற்பட்ட தம்புள்ள இனாமளுவ ஸ்ரீP சுமங்கல தேரருக்கு முன்னால் கூனிக்குறுகி நின்று ‘பள்ளிவாயிலின் ஓர் தகரத்திற்குக் கூட சேதம் ஏற்படவில்லை’ என அப்பட்டமான பொய்யைக் கூறி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் மதவுரிமையை பேரினவாதிகளின் காலடிகளில் கசக்கி வீசிய இந்த மண்ணின் மைந்தன்(?), அப்துர் ரவூப் மௌலவியுடைய கொள்கைத்தளத்தின் மீது மட்டும் இவ்வளவு பாசமும் பற்றும் கொண்டு, உள்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களை எல்லாம் அழைத்து வந்து விழாக்களை நடாத்தி கௌரவித்து மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்வதன் உள்நோக்கம் தான் என்ன?
விவாத அழைப்புக்கள் விடுக்கின்ற உலமாக்களே! தஃவா அமைப்புக்களே!
உங்களின் மார்க்க ரீதியான அறிவாற்றலை நான் பாராட்டுகிறேன். அழ்ழாஹ் உங்களின் அறிவாற்றலை மென்மேலும் வளர்க்க வேண்டும் என்று உங்களுக்காக அழ்ழாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன். அப்துர் ரவூப் மௌலவியின் அத்வைத சடவாதக் கொள்கை விடயத்தில் நமது மக்களுக்கு நேர்வழியை எடுத்துக்காட்டுவதற்காக நீங்கள் எடுத்து வரும் பிரயத்தனங்களைக் கண்டு நான் வியக்கின்றேன். ஆனால் நபிகளார் கூறினார்கள்:
‘மார்க்கத்தில் இல்லாத புதிய விஷயங்களை மார்க்கத்தின் பெயரால் உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அழ்ழாஹ் சபிக்கின்றான்’ (புஹாரி: 4002)
மேற்படி நபிமொழியின் வழியிலும், அதன் ஒளியிலும் நின்று நாம் சிந்தித்தால், அப்துர் ரவூப் மௌலவியுடைய அனைத்து விதமான வழிகேடான நடவடிக்கைகளுக்கும் தங்களின் அரசியல் அதிகார ஆதிக்கத்தின் மூலமாக உதவி ஒத்தாசைகள் புரிந்து வருவது மாத்திரமல்லாது, இன்றளவும் அவர்களுடைய வழி கேடான செயற்பாடுகளை மிகவும் பகிரங்கமாக நிறைவேற்றுவதற்கு தமது முழு ஆதரவினை நேரடியாகவும், திரைமறைவிலுமாக வழங்கி வருபவர்கள் நமது பிரதேசத்தினதும், இந்த மாவட்டத்தினதும் ஆளுந்தரப்பைச் சேர்ந்த அரசியல் அதிகாரவாதிகளே என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது. அல்லது மறைக்க எத்தனிக்கவும் கூடாது.
நீங்கள் மேற்கொள்கின்ற இஸ்லாமிய ஏகத்துவப் பிரச்சாரத்தை தீவிரவாதப்பிரச்சாரம் என்ற முத்திரையைக் குத்தி நாட்டின் பாதுகாப்புத்தரப்புக்களின் உயர்பீடங்களுக்கு ‘பெட்டிசன்கள'; மூலம் அறிக்கைகள் அனுப்பி அப்பிரச்சாரங்களை இரும்புக்கரம் கொண்டு ஈனத்தனமான முறையில் முடக்கி மூடிவிடுவதற்கு முன்னணியில் நின்று முழு மூச்சாகப் பாடுபடுபவர்களும் இந்த ஆளுந்தரப்பின் அரசியல் அதிகாரவாதிகள்தான் என்பதை இப்போது நீங்கள் நன்குணர்ந்துள்ளீர்கள்.
இந்த அரசியல்வாதிகள் தமது சரிவடைந்த வாக்கு வங்கிகளை மீள்நிரப்பி பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய அரசியல் அரங்குகளில் தமது அதிகாரத்துடனான இருப்புக்களைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளவென கேவலமான, அற்பத்தனமான சுயலாப நோக்கத்துடன் நமது இஸ்லாமிய மார்க்கத்தையே இரு வேறு கூறுகளாக்கி இன்னமும் இந்த சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்னும் பெயர் நாமங்களுடன் வலம் வருகிறார்களே, இந்த சமூகத் துரோகிகளுக்காக நீங்கள் அளித்திருக்கின்ற – அளிக்கப்போகின்ற தெளிவான மார்க்கத் தீர்ப்புக்கள்தான் என்ன?
அப்துர் ரவூப் மௌலவியின் கொள்கைத்தளத்தில் அத்வைதிகளுடன் அமர்ந்திருந்து அனைத்து விதமான மார்க்க விரோத நிகழ்வுகளிலும், பங்கெடுத்து வருகின்ற இந்த ஆளுந்தரப்பு அரசியல் அதிகாரவாதிகளும், காலாவதியாகிப்போன சில ஜால்ராக்களும் இன்று உங்களுடைய ஏகத்துவ அமைப்புக்களுக்கு ஜும்ஆ தினங்களிலும், பெருநாள் திடல்களிலும் முன்வரிசைகளில் சமூகமளித்து தங்களையும் ஏகத்துவவாதிகள் என எடுத்துக் காட்டி ஏமாற்றி வருகின்றார்களே! இந்த இரட்டை முக அரசியல் கபடநாடக வேடதாரிகளுக்கு நீங்கள் வழங்குகின்ற இறையச்சமிக்க மார்க்கத் தீர்ப்புகள்தான் என்ன?
மாத்திரமன்றி, இஸ்லாமிய மார்க்க விழுமியங்கள் நிறைந்த இக்காத்தான்குடி மண்ணில் சுதந்திரமாக ஓர் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சியொன்றை நடாத்துவதற்கு உங்களுக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற தடைகளையும் நீங்கள் நன்கறிவீர்கள். அவ்வாறான தடைகளை ஏற்படுத்தியவர்கள் யார்?
தூய இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றிய தெளிவுகளை பகிரங்கமாக பொது மக்களுக்கு எத்திவைப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கும், இடமாற்றங்கள் செய்வதற்கும் இந்த ஊரில் யாருடைய அரசியல் அதிகார ஆதிக்கங்கள் துஷ்பிரயோகமாகப் பயன்படுத்தப்படுகின்றன?
இவ்வாறெல்லாம் புனித இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எல்லாம் இவ்வூரிலிருந்து பிடுங்கி எறிந்து விட்டு கொள்கையில்லாத, கோமாளித்தனமான வெறும் பௌதீக அலங்கார இஸ்லாமிய நகராக மாத்திரம் நமது மண்ணை நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துக் காட்டுவதற்காக இராப்பகலாகச் சிந்தித்தும், திட்டமிட்டுச் செயற்பட்டும் வருவதுடன், தனது முழுமையான அரசியல் அதிகாரத்தையும் அப்பட்டமான வழிகேட்டிலிருக்கும் அத்வைதிகளுக்கு தாமாகவே தாரை வார்த்துக் கொடுத்திருக்கும் இந்த ஆளுங்கட்சி அரசியல் அதிகாரவாதிகளுக்கும், அவர்களின் அடிவருடிகளாக மார்க்கத்தை விற்று மௌனித்துக் கிடக்கும் சம்மேளனம், உலமாசபை போன்ற சமூகத் தலைமைகளுக்கும் நீங்கள் கூறப்போகும் மார்க்கத் தீர்ப்புக்கள் தான் என்ன?
அன்பார்ந்த காத்தான்குடி வாழ் இஸ்லாமியப் பொதுமக்களே!
தேர்தல் காலங்களில் நமதூரில் தூய இஸ்லாத்தின் இருப்பையும், அதன் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறவே மறந்து, வெறுமனே பிரச்சார மேடைகளில் அளிக்கப்படுகின்ற பொய்யான பௌதீக, லௌகீக அபிவிருத்தி வாக்குறுதிகளுக்காக இந்த அதிகாரவாதிகளுக்கு உங்களின் வாக்குரிமைகளைத் தாரை வார்த்து இவர்களை நமது அரசியல் தலைமைகளாகவும், நமது சமூகத்தின் காவலர்களாகவும் தெரிவு செய்தவர்கள் என்ற வகையில் நாம் அனைவருமே இன்று அவர்கள் மேற்கொள்கின்ற அத்தனைவிதமான சமய, சமூக விரோதச் செயற்பாடுகளுக்கும் நாளை மறுமையில் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
யார் ஒருவர் தீனுல் இஸ்லாத்திற்கு விரோதமான வகையில் செயற்படுகின்றாரோ அவருக்கு அந்த சந்தர்ப்பத்தை, அதிகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் என்பதற்காக இன்றுவரை நாமெல்லோரும் அழ்ழாஹ்வின் சாபத்தை சுமந்தவர்களாகவே இருக்கின்றோம்.அத்வைத வழிகேடுகள் இவ்வூரிலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டும் என முழுமூச்சுடன் பிரயாசைப்படுகின்ற நாம் அனைவரும், அந்த அத்வைதத்தை இவ்வூரில் மீண்டும் விதைத்து, தண்ணீரூற்றி, காவல் காத்து, கட்டி எழுப்பிய கனவான்களும், கயவர்களும் யார் என்பதை அறியாமல் இன்னமும் கண்மூடித்தனமாகவே இருந்து கொண்டிருக்கின்றோம்.
நமதூர் மக்களிடம் இன்று வரை இருக்கின்ற ஓர் குருட்டுத்தனமான எண்ணப்பாடுதான், ‘நமது ஆளுந்தரப்பு அதிகார அரசியல்வாதிகள் இந்த அத்வைதக் கோட்பாளர்களுடன் சேர்ந்திருந்து அவர்களையும், அவர்களின் கொள்கை ஆதிக்க வளர்ச்சியையும் ஆதரித்து வந்தாலும் நமதூருக்கும் பாரிய அபிவிருத்திகளைச் செய்கிறார்கள் தானே..’ என்கிற அப்பாவித்தனமான சடவாதமாகும்.
ஆனால் ஒரு விடயத்தில் அனைவரும் மிகவும் உன்னிப்பாக இருந்து கொள்ள வேண்டும். நாமெல்லோரும் முஸ்லிம்கள் என்ற வகையில் நாளை மறுமையில் நாம் அனைவருமே இறைவனின் சந்நிதானத்தில் இப்’பகிரங்க வழிகேடு வளர்ப்பு’ குறித்து மிகக் கடுமையான முறையில் கேள்விகளுக்குட்படுத்தப்படுவோம்.
இந்த அபிவிருத்தி மாயைகளெல்லாம் அழிந்து போகக்கூடிய இந்த உலகத்தோடு கூடவே சேர்ந்து அழியக் கூடியவைகள். அனால் நாம் உள்ளத்தளவில் விசுவாசித்து உறுதியுடன் ஏற்றிருக்கக் கூடிய ஈமான் எனும் இறை நம்பிக்கை என்பது அவ்வாறு இவ்வுலக அழிவுடன் அல்லது நமது மரணத்துடன் முடிவடைந்து விடக் கூடியதொன்றதல்ல. அது ஒன்று தான் நாளை மறுமையில் நம் ஒவ்வொருவரினதும் நிரந்தர வாழ்வினைத் தீர்மானிக்கக் கூடியது.
இன்று நம்மத்தியில் காணப்படுகின்ற இந்த இணைவைப்பு இறைகோட்பாடும், வழிபாட்டுச் சீர்கேடுகளும் நபிகளாரின் காலத்திலும் பரவலாக காணப்பட்டவைதான். ஆனால் நபிகளார் அந்த ஜாஹிலிய்யா சமுதாயத்தில் முதன் முதலில் பிரச்சாரம் செய்தது ஏகத்துவக் கொள்கையினையேயாகும். அந்த வகையில் முதலில் இன்று நமதூரில் மீளவும் வளர்ந்துள்ள ஈமானுக்கு வேட்டு வைக்கும் இந்த அத்வைத இணைவைப்புக் கொள்கையினை வேரறுக்க வேண்டும்.
அந்த இணைவைப்பை விதைப்பதற்கு முன்னின்று உழைத்துவரும் நம் அரசியல் அதிகாரவாதிகளின் கைகளை முடக்குவதற்கும் நாம் துணிய வேண்டும்.
எமது முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அத்தனை கள்ளத்தனங்களையும், கபடத்தனங்களையும் ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள இந்த ஆளுந்தரப்பு அதிகாரவாதிகளின் எதிர்காலச் செயற்திட்டங்களுக்கெதிரான பிரச்சாரங்களை முனைப்புடன் முன்னெடுப்பதற்கும் இந்த சமூகத்தில் அநீதிகளைக் களையெடுக்க எண்ணுகின்ற அனைவரும் ஒரே நேர்கோட்டில் ஒன்றுபட்டு நின்று குரல் எழுப்ப வேண்டும்.
அப்போதுதான் இந்த ஊரில் தற்போது வேரூன்றியுள்ள இறைமறுப்பு எனும் இம்முஸீபத்தின் எச்ச சொச்சங்களை அடுத்த தலைமுறைக்கும் விட்டு வைக்காமல் எம்மால் பாதுகாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜும்மாப் பள்ளிவாயில் பட்டப்பகல் வேளையில் சிங்களப் பேரினவாதிகளால் ஆக்ரோஷமாகத் தகர்த்தெறியப்பட்ட போது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த இந்த ஆளுந்தரப்பு அரசியல் சுயநல அதிகாரவாதிகள், அதற்கு முன்னின்று செயற்பட்ட தம்புள்ள இனாமளுவ ஸ்ரீP சுமங்கல தேரருக்கு முன்னால் கூனிக்குறுகி நின்று ‘பள்ளிவாயிலின் ஓர் தகரத்திற்குக் கூட சேதம் ஏற்படவில்லை’ என அப்பட்டமான பொய்யைக் கூறி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் மதவுரிமையை பேரினவாதிகளின் காலடிகளில் கசக்கி வீசிய இந்த மண்ணின் மைந்தன்(?), அப்துர் ரவூப் மௌலவியுடைய கொள்கைத்தளத்தின் மீது மட்டும் இவ்வளவு பாசமும் பற்றும் கொண்டு, உள்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களை எல்லாம் அழைத்து வந்து விழாக்களை நடாத்தி கௌரவித்து மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்வதன் உள்நோக்கம் தான் என்ன?
நீங்கள் மேற்கொள்கின்ற இஸ்லாமிய ஏகத்துவப் பிரச்சாரத்தை தீவிரவாதப்பிரச்சாரம் என்ற முத்திரையைக் குத்தி நாட்டின் பாதுகாப்புத்தரப்புக்களின் உயர்பீடங்களுக்கு ‘பெட்டிசன்கள'; மூலம் அறிக்கைகள் அனுப்பி அப்பிரச்சாரங்களை இரும்புக்கரம் கொண்டு ஈனத்தனமான முறையில் முடக்கி மூடிவிடுவதற்கு முன்னணியில் நின்று முழு மூச்சாகப் பாடுபடுபவர்களும் இந்த ஆளுந்தரப்பின் அரசியல் அதிகாரவாதிகள்தான் என்பதை இப்போது நீங்கள் நன்குணர்ந்துள்ளீர்கள்.எமது முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அத்தனை கள்ளத்தனங்களையும், கபடத்தனங்களையும் ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள இந்த ஆளுந்தரப்பு அதிகாரவாதிகளின் எதிர்காலச் செயற்திட்டங்களுக்கெதிரான பிரச்சாரங்களை முனைப்புடன் முன்னெடுப்பதற்கும் இந்த சமூகத்தில் அநீதிகளைக் களையெடுக்க எண்ணுகின்ற அனைவரும் ஒரே நேர்கோட்டில் ஒன்றுபட்டு நின்று குரல் எழுப்ப வேண்டும்.
Post a Comment