BREAKING NEWS

நிதாவுல் ஹைர் = நோன்பை முன்னிட்டு உதவிப் பொருட்கள்




(ஏ.எஸ.எம்.ஜாவித்)   2015.06.21;
நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட தந்தையை இழந்த சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 400 அநாதைப் பிள்ளைகளுக்கு நிதாவுல் ஹைர் நிறுவனத்தினால் புனித நோன்பை முன்னிட்டு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளரும் நிதாவுல் ஹைர் நிறுவனத்தின் செயலாளருமான எஸ்.எல்.நௌபர் மௌலவி தலைமையில் நேற்று (20) கொழும்பு அல்-ஹிதாய நவோதைய பாடசாலையில் இடம் பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக மற்றும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஸாத் பதியுதீனும் கௌரவ அதிதியாக நிதாவுல் ஹைர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அஸ் ஸெய்க் காலித் அல்-தாவுத் மற்றும் மேற்படிக் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் பொருள் உதவி வழங்கிய பரோபகாரியும் சவுதி அரேபியாவின் பிரபல சமுக சேவையாளருமான அபு பஹ்த் அல்-ஹன்னாஸ் அவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்..
இதன்போது நாடளாவிய ரீதியில் கணவன்மாரை இழந்த சுமார் 200 விதவைத் தாய்மார்களுக்கு வீட்டுச் செலவிற்கு நான்கு மாதங்களுக்குத் தேவையான நிதி உதவிகளும்  அவர்களின் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பாடசாலைப் பைகள், பாதணிகள், துவிச் சக்ர வண்டிகள் மற்றும் நோன்புப் பெருநாளைக்கான உடுப்பு வகைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar