சர்வதேசமெங்கும் செய்தித் தாள்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் பண்பாடு, அபிவிருத்தி, முன்னேற்றம் என்பவற்றிக்கு உறுதுணை புரிகின்ற செயற்பாடுகளில் பத்திரிகையும் பிரதான இடத்தை வகிக்கின்றது.
சாதாரணமாக சமூக வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்ற அனைவரும் உலகப் போக்கை அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. ஆதியில் பத்திரிகை அச்சிடுவதற்கு உண்டான சிக்கல்கள், பத்திரிகை வெளியிடுவதில் ஏற்படுகின்ற பங்கம், செய்தித் தாளின் தோற்றம் என்பவை பற்றி ஆராய்வது முக்கியம்.
உலகில் முதன் முதல் வெளிவந்த செய்தித்தாள் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் பிரசுரமானது. ஆறாம் நூற்றாண்டில் வெளிவந்த இதற்கு ‘ட்சிங் பவோ’ என்று பெயரிடப்பட்டது. இதற்கு பத்திரிகை சுதந்திரத்தை கண்டிப்பாக பேண வேண்டிய தேவை ஏற்படவில்லை. இதற்கு காரணம் இப்பத்திரிகை முற்று முழுதாக சீன அரசாங்கத்தினாலேயே அச்சிடப்பட்டமையே.
இதனைத் தொடர்ந்து சர்வதேசமெங்கும் தனியார் நிறுவனங்கள் செய்தித் தாள்களை தினமும் பிரசுரித்து வாசகர்களைத் திருப்திப்படுத்தின. இதனால் அரசாங்கத்திற்கு பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளைக் கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது சர்வதேசமெங்கும் வெளிவருகின்ற செய்தித் தாள்களில் சமகால அரசியலுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள், விளையாட்டுச் செய்திகள் என்பனவற்றையும் பிரசுரிக்கின்றனர்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொடர்பாடல் என்பவை குன்றிய அக்கால கட்டத்தில் பத்திரிகையை அச்சுக்கோர்த்து வெளியிட முடியவில்லை. அதற்கு மாற்aடாக அச்சுக் கூடத்தில் எழுத்துக்கள் செதுக்கிய மரத்துண்டு மூலம் அச்சடித்து வெளியிட்டனர். கம்பியூட்டர், இணையத்தளம் போன்றவை பாவனைக்கு வராதநிலையில் இவ்வழிமுறையே சில நூற்றாண்டு காலம் தொடர்ந்ததாக அறிய முடிகின்றது.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை கிறிஸ்தவ மக்களின் புனித பூமியாக விளங்குகின்ற உரோமாபுரியில் பத்திரிகையொன்று பிரசுரமானது. உரோமை வதிவிடமாகக் கொண்ட எழுத்தாளர், நிருபர்கள், கவிஞர் போன்றவர்கள் தமது ஆக்கங்களை இப்பத்திரிகையில் பிரசுரிக்க வைத்தனர். தொடர் கதைகள். கேலிச் சித்திரங்கள் கூட வெகு ரம்மியமான முறையில் வெளிவந்தன. வர்த்தகர்களின் நலன்கருதி விளம்பர பக்கமும் உள்ளடக்கப்பட்டது.
இங்கிலாந்தில் முதன் முதல் தோன்றிய தினசரிப் பத்திரிகை எலிசபெத் மாலெட் என்ற அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக பிரசித்திபெற்று விளங்கும் ‘லண்டன் டைம்ஸ்’ (ழிலினிளிலினி ஹியிணிரிஷி) என்ற பத்திரிகை 1785 இல் ஜோன் மாஸ்டர் என்பவரால் உலக ரெஜிஸ்தார் என்னும் நாமத்துடன் தொடங்கப்பட்டது.
இன்றுகூட ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை உன்னத இடத்தை வகிக்கின்றது.
அமெரிக்காவில் முதலில் தோன்றிய பத்திரிகை பொது நிகழ்ச்சி என்பதாகும். இந்நிறுவனத்தை 1690 ஆம் ஆண்டு பொஸ்டன் நகரில் பென்ஞமின் ஹாரிஸ் நிறுவினார். அந்நேரமே பத்திரிகைச் சுதந்திரத்தை மீறும் வகையில் நடந்து கொண்டமையினால் அமெரிக்க அரசாங்கம் அதன் முதல் இதழிலேயே தடைசெய்து விட்டது.
அதன் பின்னர் வெளிவந்த பத்திரிகைகள் பத்திரிகை சுதந்திரத்தை முற்று முழுதாகப் பேணி செய்திகளைப் பிரசுரிக்கலாயின. ஆனால் அதன் விலை அதிகமாக இருந்தமையினால் கணிசமானவர்களால் வாங்கிப் படிக்க முடியவில்லை. 1833 இல் மிகவும் குறைந்த விலைக்கு பத்திரிகையொன்று பிரசுரமாகி வெளிவரத் தொடங்கியது. இதற்கு ‘சண்’ (ஷிun) என்று நாமம் சூட்டப்பட்டது. அதன் பின்னரே பத்திரிகை வாசகர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது.
அமெரிக்காவில் ஒருவரே பல பத்திரிகைகளை அநேகமான ஊர்களில் வெளியிடும் வழக்கம் உள்ளது. இவற்றைச் சங்கிலிப் பத்திரிகைகள் என்பர். அதேவேளை ஒரு ஊரில் வெளியாகும் பத்திரிகையை வானொலி மூலம் வேறு நகரங்களுக்கும் அதேசெய்திகளோடு அச்சிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த நடைமுறையை இணையம் தன்வசப் படுத்திக் கொண்டது. தற்போது இணையத்தின் பங்களிப்புடன் சில பத்திரிகைகள் மேற்குறிப்பிட்ட பிரகாரம் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களுக்கு தங்குதடையின்றி விநியோகிக்கப்படுவதையும் காண முடிகின்றது.
ரஷ்யாவின் முக்கியமான பத்திரிகை ஈஸ்ட்வெஸ்ரியா, பிராங்டா என்பனவாகும். இந்தியாவில் ஒளரங்கசீப் காலத்திலேயே செய்தித்தாள் விற்பனைக்கு விடப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
சென்னையில் முதன் முதல் வெளிவந்த பத்திரிகை சென்னை கூரியா. முதன் முதல் வெளியான ஆங்கிலப் பத்திரிகை ‘த ஹிண்டு’ ஆகும். இதனை ஜீ. சுப்பிரமணிய ஐயர் என்பவர் தோற்றுவித்தார். இதனை வெளிநாடுகளுக்கு விமான மூலம் அனுப்பி வைத்தனர். இப்பத்திரிகையை மெல்லிய ‘ரிசு ரக கடதாசியிலேயே அச்சிடுகின்றனர். சுதேச மித்திரன் முதன் முதல் தமிழ் மொழியில் வெளிவந்த பத்திரிகை.
சுப்பிரமணிய ஐயராலேயே இதுவும் பிரசுரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியப் பத்திரிகைகள் அரசியல் செய்திகளை வெளியிடுவதில்லை. இலக்கியம், மதம், சமூகச்சீர்திருத்தம், பொது அறிவு ஆகிய விடயங்களை மட்டுமே பிரசுரித்து வந்தன. இந்தியாவில் உண்டான சுதந்திரப் போராட்டத்தையடுத்தே அரசியல் செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இலங்கையில் மும்மொழிகளிலும் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கி சுமார் நூறு ஆண்டுகள் ஆகின்றன.
Post a Comment