BREAKING NEWS

வில்பத்து சம்பந்தமாக முஸ்லிம்களின் கையெழுத்து -அரசியல் ஏமாற்று

வில்பத்து சம்பந்தமாக முஸ்லிம்களின் கையெழுத்து பெறும் முயற்சி நடைபெறுகிறது. ஏதோ செய்கிறோம் என செய்கிறார்கள். செய்யட்டும். ஆனால் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய செயலாக இதனை காண முடியவில்லை. காரணம் கடந்த அரசிலும் பள்ளிவாயல் உடைப்புக்கெதிராக முஸ்லிம்களிடமிருந்து இரண்டு லட்சம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. கடைசியில் அவை குப்பை தொட்டிலுக்குத்தான் சென்றன. உண்மையில் வில்பத்து பிரச்சினையில் முஸ்லிம்களை விரட்டியடிக்க இந்த அரசாங்கமே முழு மூச்சாக முயற்சிக்கிறது. இதனை ஒரு பிரச்சினையாக்கி வடக்கு முஸ்லிம்களை மீண்டும் விரட்டி தமிழர்களுக்கு தீர்வு வங்குவதே இந்த அரசின் நோக்கமாக தெரிகிறது.
 ஆகவே இந்த அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றை அமைச்சர் ரிசாத் அல்லது அவரது கட்சியினர், முஸ்லிம் மீடியா போரம் என்பன  ஏற்பாடு செய்வதே பிரச்சினக்கான தீர்வை நோக்கிய நகர்த்தலாக இருக்கும். இல்லாவிடில் இதுவெல்லாம் அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றும் அமைச்சர் ரிசாதின் அரசியல் காய் நகர்த்தல் தவிர வேறில்லை.
-முபாறக்  

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar