BREAKING NEWS

அமைச்ச‌ர் ரிசாதுக்கு மிக‌ தாம‌த‌மாக‌வே உண்மை புரிந்துள்ள‌து.

ஜனாதிபதி மைத்திரியின் பேச்சு, றிசாத் பதியுதீன் விசனம்

-அஸ்ரப். ஏ. சமத்-

தினகரன் வாரமஞ்சரி இனை ஆசிரியர் சுகைப் எம்.காசீம் எழுதிய 'வடபுல முஸ்லீம்களின் மீள் குடியேற்ற சவால்கள'எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பு தபால் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில்   ஊடகவியலாளர்கள் , அரசியல்வாதிகள் இலக்கியவாதிகள் முஸ்லீம் மீடியா போரத்தின் உறுப்பிணர்கள்  கல்வியலாளர்கள் என மண்டபம் நிறைந்து காணப்பட்டது.

இந் நிகழ்வில்  உரையாற்றிய  அமைச்சர் றிசாத் பதியுத்தீன் -

இந்த முஸ்லீம்கள் அவல நிலை வில்பத்து விவகாரம் பற்றி நேற்று இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை கொழும்பு ஹிங்ஸ்பரி ஹோட்டலில் அழைத்து வடக்கு வாழ் முஸ்லிம்களை 1990களில் 1 இலட்சமபேர் விரட்டப்பட்டு இன்னும் மீள் குடியேற்றப்படவில்லை. என்றும் முஸ்லீம்கள் மீதும் அபாண்டமாக குடியேற்றுவதாகவும் தெரிவித்து சில ஊடகங்கள் அப்பாண்டமாக என் மீது பழிசுமத்துவதையும் அவர்களுக்கு விளக்கும்  ஒரு சந்திப்பை நடாத்தினேன்.

அங்கு ஒரு தனியார் ஊடகம் அங்கு வந்ததாகவும் அவர்களை அங்கு விடவில்லை என்றும் எண்னிடம் தற்பொழுது தெரிவித்து எனது தொலைபேசியில் கேள்விகளை கேட்டுவிட்டு அவர்கள் இலங்கை பற்றி நான் அவதூரமான கருத்துக்களை வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து சொல்வதாக எனது தொலைபேசி செய்தியை சிலவற்றை  கட்பண்னி அவதூரான செய்திகளை இந்த தனியார் ஊடகமொன்று பரப்புகின்றது. இந்த செய்திக்குப் பின்னால் எமது பகுதி அரசியல்வாதியே உள்ளார்.

முஸ்லீம்களது காணிப்பிரச்சினையை திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் உள்ளன. இன்னும் இவை தீர்க்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோ தற்போது உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவோ தீர்க்கவில்லை. ஆனால் நானும் இந்த அமைச்சினைப் பொறுப்பை விட்டுவிட்டு அல்லது தூக்கி எறிந்துவிட்டு தமிழர் தேசிய முன்னணி இரா சம்பந்தன் போன்றும், ஜே.வி.பி தலைவர் அனுரகுமார போன்று ஒரு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் எனது முஸ்லீம் சமுகத்தின் பிரச்சினைக்கு போர வேண்டி ஏற்படும். அதனை நான் செய்யவும் தயார். 

ஆனால் எந்த ஒரு ருபாவோ சதமோ பெறாமல் மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம். இதற்காக முஸ்லீம் சமுகம் 95 வீதமாக வாக்களித்தார்கள். ஆனால் ஏனைய கட்சித் தலைவர்கள் தம்மிடம் அரசியல் தலைகள் இத்தனை உண்டு. எவ்வளவு தருவீர்கள் ? என பேரம் பேசினார்கள். ஆனால் நேற்றுக் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உலக சூற்றாடல் தினத்தில் அவர் பேசிய பேச்சுக்களில் வைத்து வில்பத்து முஸ்லீம்கள குடியேற்றத்தைப் காட்சிப்படுத்தி  முஸ்லீம்கள் இந்த நாட்டில் காணி அபகரிப்பாளார்கள். கட்டு வனத்தை ஆக்கிரமிப்பவாகள். போன்ற செய்திகளை சில சிங்கள ஊடகம் மட்டுமல்ல அரச ஊடகங்கள் இதனை ஒலி ஒளிபரப்பியுள்ளன.

கடந்த அரசின்  9 மாதத்திறகுள் கடைசியாக சுற்றாடல் அமைச்சராக இருந்த அனுர பிரியதர்சன யாப்பாவே வில்பத்து பகுதியில் அண்டியுள்ள முஸ்லீம்களது பரம்பரை இருந்த வந்த 6500 கெக்டேயர் காணிகளை வனவலமாக வர்த்தமானியில் அரச காணியாக அனுமதித்துள்ளார். 

முன்னைய அரசு தற்போதைய அரசின் ஆதரவு இல்லாமல் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் நான் நேரடியாக வடக்கு முஸ்லீம்கள் மீள குடியேற்றம் சம்பந்தமாக எழுதி பாக்கிஸ்தான், கசகஸ்த்தான், குவைத், கட்டார், சவுதி அரேபியா நாடுகளுக்கும் எழுதினேன்.  சுpல இலங்கையில் உள்ள உள்ளுர் முஸ்லீம் தனவந்தர்களை அனுகி 500 வீடுகளையே இதுவரை வடக்கில் முஸ்லீம்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன். மேலும் 16 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்ட வேண்டியுள்ளது. 

இந்திய வீட்டுத்திட்டத்தில் கூட ஒரு இலட்சம் முஸ்லீம்களுக்கு ஆக்க குறைந்தது 7ஆயிரம் வீடுகளாவது நிர்மாணித்;திருக்க வேண்டும். அவர்களும் ஆகக் குறைந்த 300 வீடுகளை நிர்மாணித்துவிட்டு இறுதியில் தரமுடியாது  என கையை விரித்துவிட்டார்கள். 

ஆனால் எனக்கு வாழைத்தோட்டம் உள்ளதாகவும் சில தமிழ் சகோதரைக் கூட அழைத்து தொலைக்காட்சியில் பேசி எனக்கு எதிராக சதித் ;திட்டம தீட்டுகின்றனர். அநத குரல் கொடுத்த தமிழ் அன்பரே என்னிடம் மண்னிப்பு கேட்டார். தனக்கு தொழில் பெற்றுத்தருவதாகவும் இவ்வாறு எனக்கு எதிராக பேசச் சொன்னதாகவும் அவர் என்னிடம் சொல்லுகின்றார். இதனை நான் வளர்த்த கடா என் நெஞ்சில் எட்டி உதைக்கின்றது. என அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அங்கு உரையாற்றினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar