பொத்துவில் முஸ்லிம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சைத்தியை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நாளை (20) பொத்துவிலுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
குறித்த சைத்தி திறப்பை முன்னிட்டு அரச படையினரால் பொத்துவில் பிரதான வீதி மற்றும் சில உள்ளூர் வீதிகளிலும் பெளத்த கொடிகள் வீதிக்கு குறுக்கே தொங்க விடப்பட்டுள்ளன.
உள்ளூர் வீதியில் தொங்கவிடப்பட்ட பெளத்த கொடிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது என அம்பாறை- மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (19) மாலை பொத்துவில் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரி பீ.டீ சம்சுதீன் (DIG), அம்பாறை மாவட்ட உதவிப்பொலிஸ் அதிகாரி எஸ்.எம்.கெமுன் திலகரத்தன (ASP) மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டதுடன் பொது மக்களும் பங்குபற்றினர்.
திறக்கப்பட இருக்கும் பெளத்த சைத்தி பிரதேச மக்களின் எதிர்ப்பிற்க்கு மத்தியில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த அவர்களால் அடிக்கல் நடப்பட்டு, இன்னால் ஜனாதிபதியால் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் ஒரு பெளத்த குடும்பம் ஏனும் இல்லாத தனித்துவ முஸ்லிம் பிரதேசத்தில் இச்சைத்தி திறபட இருப்பது விசேட அம்சமாகும்.
Post a Comment