BREAKING NEWS

உலமா க‌ட்சி அமெரிக்காவுக்கு பாராட்டு.

ப‌ர்மாவின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு 24 மாத‌ங்க‌ளுக்குள் பிர‌ஜா உரிமை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ அமெரிக்கா அந்நாட்டுக்கு க‌ட்ட‌ளை இட்டிருப்ப‌தை இல‌ங்கை உல‌மா க‌ட்சி பெரிதும் வ‌ர‌வேற்கிற‌து. இத‌ற்காக‌ உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ள் த‌ம‌து ந‌ன்றியையும் பாராட்டையும் அமெரிக்காவுக்கு த‌ம‌து நாடுக‌ளில் உள்ள‌ தூதுவ‌ரால‌ய‌ங்க‌ள் மூல‌ம் தெரிவிப்ப‌த‌ன் மூல‌ம் நாம் தொட‌ர்ந்தும் இது விட‌ய‌த்தில் அக்க‌றையுட‌ன் இருக்கிறோம் என்ப‌தை வெளிக்காட்ட‌ முடியும்.
ந‌ல்ல‌தை எவ‌ர் செய்தாலும் அத‌னை ஆத‌ரிப்ப‌தும் தீய‌தை எந்த‌ ம‌கான் செய்தாலும் அத‌னை க‌ண்டிக்க‌ வேண்டும் என்ப‌து உல‌மா க‌ட்சியின் வ‌ழி முறையாகும். இந்த‌ வ‌கையில் அமெரிக்காவின் இச்செய‌லை அனைத்து ஊட‌க‌ங்க‌ள் மூல‌மும் நாம் வெளிப்ப‌டையாக‌ பாராட்ட‌ முஸ்லிம்க‌ள் முன் வ‌ர‌வேண்டும். இத‌னை வ‌ர‌வேற்கும் வ‌கையில் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை, ஏனைய‌ முஸ்லிம் பெரும்பான்மை பிர‌தேச‌ ச‌பைக‌ள், கிழ‌க்கு, வ‌ட‌க்கு மாகாண ச‌பைக‌ளில் தீர்மாண‌ம் நிறைவேற்றி அத‌னை முழு உல‌குக்கும் காட்ட‌ வேண்டும் என‌ ப‌ர்மா முஸ்லிம்க‌ள் மீது அக்க‌றை கொண்ட‌ அனைவ‌ரையும் உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத், க‌ஃபூரி, ந‌த்வி, ம‌த‌னி. த‌லைவ‌ர், ஸ்ரீ ல‌ங்கா உலமா க‌ட்சி.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar