BREAKING NEWS

கட்சிகளுக்கிடையிலான பேச்சு மற்றும் இழுபறி

தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைப்பது தொடர்பிலான இறுதி முடிவு எடுப்பதில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளுக்கிடையே நேற்றும் இழுபறி நிலை தொடர்ந்தது.
கண்டி சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமர விக்ரமவின் கண்டியிலுள்ள இல்லத்தில் வைத்து பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் அமைச்சரவை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது.
அதனைத் தொடர்ந்து கண்டியிலிருந்து கொழும்புக்கு விரைந்த ஜனாதிபதி நேற்று மாலை 04 மணியளவில் தனது இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடனான அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கண்டியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீல. சு. க மத்திய குழுவின் அனுமதியை பெறும் வகையில் நேற்று மாலை இந்த அவசரக் கூட்டம் நடந்ததெனத் தெரிய வருகிறது. செய்தி அச்சுக்குப் போகும் வரை இது தொடர்பான எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஐ. தே. க வைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீல. சு. க வைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்குமிடையில் மிகவும் உயர்மட்டத்தி லேயே அமைச்சரவை தொடர்பிலான முக்கிய சந்திப்புகளும் கலந்துரையாடல் களும் இடம்பெற்றுள்ளமையினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கும் அமைச் சரவை குறித்த எந்தவொரு திட்டவட்ட மான முடிவும் நேற்று மாலைவரை தெரிந்திருக்கவில்லை.
அரசியலமைப்பின் 19 ஆவது சீர்தி ருத்தத்தின் படி ஆகக்கூடியது 45 அமைச் சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும். அரசியலமைப்பு நிபுணர்களின் கருத்துப்படி 30 அமைச்சர்கள் எவ்வித பாராளுமன்ற அனுமதியுமின்றி நேரடியாக பதவியேற்க முடியும். ஏனைய 15 அமைச்சர்களும் பாராளுமன்றம் கூடியதன் பின்னரே பதவியேற்க முடியும்.
எவ்வாறானபோதும், அமைக்கப்பட வுள்ள புதிய அமைச்சரவையில் 51 உறுப்பினர்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்படப்போவதாக நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஐ. தே. க பிரதிநிதிகளை அல்லது ஸ்ரீல. சு. க பிரதிநிதிகளை பொறுப்பேற்பது என்ற சிக்கல் நிலை கட்சிகளுக்கிடையில் உருவாகியிருப்பதாக வும் தெரிய வந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றிபெற்றது ஐ. தே. க உள்ளடக்கிய கூட்டமைப்பு என்பதனால் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் தனது கட்சி சார்ந்தவர்களுக்கே வழங்க வேண்டு மென்பதில் உறுதியாக இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின.
கட்சிகளுக்கிடையிலான பேச்சு மற்றும் இழுபறி நிலையினை வைத்துப் பார்க்கும்போது இன்று அமைச்சரவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இந்த பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடருமென்றே எதிர்பார்க்கப் படுகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar