BREAKING NEWS

தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளமை பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று - உலமா கட்சித்தலைவர்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளமை பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதுடன் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபி மைத்திரிபால சிறிசேன பெரிதும்  பாராட்டுக்குரியவர் என முஸ்லிம் உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.

கட்சித்தலைமையகத்தில் நடைபெற்ற உயர்சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, நடந்து முடிந்த தேர்தலில் எந்தக்கட்சியினாலும் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பது உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த நிலையில் ஜனாதிபதி தலையிட்டிருக்காவிட்டால் ஐ தே கவினால் ஆட்சியமைக்க முடியாது போயிருக்கும். நாட்டின் எதிர் காலத்தை கருதி சகல கட்சிகளையும் உள்வாங்கி நல்லதொரு அரசாங்கம் அமைய வேண்டுமென்ற விருப்பம் கொண்டிருந்த ஜனாதிபதி மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு பிரதான இரண்டு கட்சிகளையும் இணைத்து அரசமைத்துள்ளமை மாபெரும் வரலாற்று நிகழ்வு என்பதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின கொள்கைக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.

கடந்த பொதுத்தேர்தலில் எமது கட்சி தேசிய ரீதியில் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஐ ம சுதந்திர முன்னணிக்கும், அம்பாரை மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும்  ஆதரவளித்ததன் மூலம் தேசிய அரசாங்கம் அமைய நாமும் முன்னுதாரணமாக இரந்துள்ளோம் என்பது இன்று அரசியல் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஆகவே இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாடு முன்னேற இவ்விரு தேசிய அரசாங்கம்; பாடு படுவதுடன், நாட்டில் இனவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் சகல இன மக்களும் நிம்மதியாய், அடுத்தவர் தொந்தரவின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே உலமா கட்சியின் பெரு விருப்பமாகும்.
அதே போல் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், எந்த வொரு இனத்தையும் பாதிக்காத வகையில் தீர்வை முன்வைப்பதற்கும் தேசிய அரசாங்கம் முனைப்புடன் செயற்பட வேண்டும். இதனை ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலத்துள் செய்து முடிக்கப்படும் என நாம் நம்புகிறோம் என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar