BREAKING NEWS

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழு அறிக்கை வர்த்தமானி பிரசுரத்திற்காக

உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை வர்த்தமானி பிரசுரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம், சுமார் 6000 உள்ளூராட்சி மன்றப் பிரிவுகள் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார அடிப்படையில் நடைபெறவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்தார்.
வர்த்தமானி பிரகடனத்தின் பின்னர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அதுகுறித்த விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar