BREAKING NEWS

நவம்பர் மாதத்தில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்..?

 


எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு இவ்வாறு தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புதிய முறைமையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த தேவையான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கையொப்பமிட்டுள்ளார்.இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று  பெரும்பாலும் வெளியிடப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. தடாலகே தெரிவித்துள்ளார்.

335 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.விகிதாசார மற்றும் தொகுதிவாரி அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பகுதி பகுதியாக தேர்தலை நடாத்தாது ஒரே தடவையில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar