BREAKING NEWS

"ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரிப்பேன்" முஜீபுர் ரஹ்மான்



 இதுகுறித்து  அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாளை செவ்வாய்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு ரணில் விக்கிரமசிங்க வருகிறார். 11 மணிக்கு இதகுறித்த நிகழ்வுகள் பள்ளவாசலில் நடைபெறும் இதில் பங்கேற்குமாறு எனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாக ஏன் முஸ்லிம் ஒருவருக்கோ அல்லது அதிகமானவர்களுக்கோ தேசியப் பட்டியல் வழங்கவில்லை என்பது எனக்குத் தெரியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகள் குறித்தும் நான் அறியமாட்டேன். எனவே தேசியப் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சியைச் நேர்ந்த முஸ்லிம்களுக்கு இடம் வழங்காமை குறித்து நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரிப்பேன்.

இம்தியாமுஸ்லிம் பாக்கீர் மார்க்கார் விவகாரம் பற்றியும் நான் அறியவில்லை. அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக பாரிய பங்களிப்புச் செய்தார். இதில் சந்தேகம் இல்லை எனவும் முஜீபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar