BREAKING NEWS

மடவளை எனும் சேறு பூசும் சேனல். அசாத் சாலி....

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி நேற்று முன்தினம் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்திஇருந்தார்  இதன் போது திங்களன்று இடம்பெற்ற உவைஸ் ஹாஜியார் நடத்திய ஊடக மாநாட்டில் முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டு தொடர்பாக  ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அசாத் சாலி....

பல ஊடகங்களை அழைத்து ஊடக  மாநாடு  ஒன்றை  உவைஸ் நடத்தினார். பல மைக்குகள் வைக்கப்பட்டிருந்தன நாமும் சில மைக்குகளை அனுப்பி வைத்தோம் ஆனால் அந்த ஊடக மாநாட்டை மெட்ரோ நியுஸ் பத்திரிக்கை ஒரு வானொலி மடவளை எனும் சேறு பூசும் சேனல்  அதனை மூட   நாங்க வழி பன்னுவோம்  ''இன்ஷா அல்லாஹ்'' அதில் தான் இந்த கேம்பைனை காசுக்காக  கொண்டுசென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த ஊடக மாநாட்டை அனைவரையும் அழைத்து  சாப்பாடு கொடுத்தது நடத்தியிருந்தார்கள்.  என குறிப்பிட்டிருந்தார்.

குறித்த செய்தி கடந்த இருபத்து மூன்றாம் திகதி மெட்ரோ நியுஸ் செய்தி வெளியிட்ட அதே தினத்தில் குறித்த ஊடக மாநாடு தொடர்பான  செய்தியை முஸ்லிம்கள் அதிகமாக படிக்கும் தேசிய பத்திரிகைகளான விடிவெள்ளி மற்றும் நவமணி உற்பட முன்னணி சிங்கள நாளிதல்களான ''அத'' மற்றும் திவயின ஆகிய பத்திரிகைகளும் ஓரிரு இணையதளங்களை தவிர பல முன்னணி  இணையதளங்களில் குறித்த செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்திகள் எமது வாசகர்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.



Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar