BREAKING NEWS

அமைச்சர் ரிசாத்,ஹக்கீமின் அதிகாரங்கள் குறைந்தது

நிதியமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் பொறுப்புகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் நிதியமைச்சின் கீழ் இருந்த அரச வங்கிகளில், மத்திய வங்கி தவிர்ந்த ஏனைய அனைத்து வங்கிகளும் கபீர் ஹாசிமின் பொதுத்துறை தொழில்முயற்சி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோல், அமைச்சர் ஹக்கீமின் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபை, அமைச்சர் சம்பிக்கவின் பெருநகர அபிவிருத்தி அமைச்சுக்கு சென்றுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள், அமைச்சர் மலிக் சமரவிக்ரமசிங்கவின் சர்வதேச வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலையடுத்து அமைக்கப்பட்ட அமைச்சுக்களில், குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar