BREAKING NEWS

ஹெம்மாத்தகம சம்பவம்: ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு கண்டனம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் நடத்தப்பட்ட கூட்டத்தை பொதுபல சேனா குழப்பியதன் மூலம் இந்த ஆட்சியிலும் தனிநபர்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது என ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, கடந்த அரசாங்கம் பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புக்களை கட்டுப்படுத்தவோ சட்ட நடவடிக்கை எடுக்கவோ முனையவில்லை என்ற ஒரேயொரு காரணத்க்காகவே இலங்கை முஸ்லிம்களில் 99 வீதமானோர் கடந்த ஜனாதிபதிக்கெதிராக வாக்களித்ததுடன் அவரை பிரதமராகவும் வர விடாமல் தடுப்பதில் வெற்றி கண்டது. ஆனால் பொது சேனா அண்மையில் மாவனல்ல ஹெம்மாத்தகமவில் நடந்து கொண்ட விதமும் பொலிசார் அவர்களுக்கெதிரான முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்தமையும் பார்க்கும் போது முஸ்லிம்கள் ஆட்சியை மாற்றியதில் தோற்றுப்போனதாகவே தெரிகிறது.

நாட்டின் பிரிவினைக்கு துணை போகாத எந்தவொரு இயக்கமும் நாட்டில் கூட்டத்தை நடத்தலாம் என்பதற்கு சட்டம் இடம் கொக்கிறது. ஆவ்வாறான கூட்டம் ஒரு மதத்துக்கோ இனத்துக்கோ எதிராக இருப்பின் பொலிசார் மூலம் நீதி மன்றத்தின் தடை உத்தரவின் மூலம் அக்ககூட்டத்தை தடை செய்ய முடியும் என்பதே இந்த நாட்டின் சட்டமாகும். கொலைகாரனைக்கூட பொது மக்கள் தண்டிப்பதற்கு நாட்டில் சட்டம் இல்லை. இந்த நிலையில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் எங்கு வேண்டுமானாலும் எவரை அழைத்தும் கூட்டம் நடாத்த முடியும். பலாத்காரமில்லாமல் தமது சுய விருப்பத்துடன் எந்த மத மக்களும் அதில் கலந்து கொள்ள முடியும். சட்டம் இவ்வாறு இருக்கையில் பொது பல சேனா சட்டத்தை கையிலெடுத்து செயற்படுகின்றதென்றால் ஐ தே க தலைமையிலான இந்த ரசும் இதற்கு இடம் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே நாட்டில் சட்டத்தை நிலை நாட்டி ஒரு இனத்துக்கெதிராக இன்னொரு இனம் சட்டத்தை கையிலெடுப்பதை தடுத்து மேற்படி சம்பவத்;தில் ஈடுபட்;டோரை உடனடியாக கைது செய்யும்படி நாம் அரசை கோருதுடன், தேர்தலில் வென்றவுடன் தமது வேலை முடிந்து விட்டது என இராமல் இது விடயத்தில் முஸ்லிம் எம் பீக்கள் தமது கவனத்தை செலுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar