BREAKING NEWS

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் அமைச்சுக்கான பொறுப்பினை பாரமேற்றுக் கொண்டாா்.

அஸ்ரப் ஏ சமத்.




தேசிய நீா வழங்கள் மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சரும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவா்  ரவுப் ஹக்கீம் இன்று பாராளுமன்ற வீதியில் உள்ள நீா்வழங்கள் அமைச்சில் தமது புதிய அமைச்சுக்கான  பொறுப்பினை பாரமேற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்வில் கிழக்கு முதலமைச்சா் நசீா் அகமட் அமைச்சின் அதிகாரிகள், முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பிணா்களும் ஆதரவாளா்களும் பெருமலவில் கலந்து கொண்டனா்.  

இங்கு உரையாற்றிய அமைச்சா்  இலங்கையில் 20 பாரிய  குடி நீா் வழங்கள் திட்டங்கள்  நடைமுறையில் உள்ளது.  அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அமைச்சா் சம்பிக்க ரணவவுக்கு மேல் மாகாண நகர அபிவிருத்திக்கான  நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒரு பகுதி வழங்கப்படும் அதற்கான சட்ட நகல் பிரதம மந்திரியின் ஆலோசனையின்  பேரில்  அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் கொண்டுவரப்படும்.   மேல் மாகாணம் தவிா்ந்த ஏனைய மாகாணங்கள் எனது அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என அமைச்சா் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.

அத்துடன் வடக்கு நீா் பிரச்சினை, களனி கங்கை நீா்ப்பிரச்சினைகளும் கவணத்திற்கு எடுக்கப்பட்டு கடல் ்நீா் குடி நீராக்கல் திட்டமொன்று அமுல்படுத்தப்படும். அத்துடன் வறட்சியான பிரதேசங்களில் நீா் வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சா் ஹக்கீம் அங்கு தெரிவித்தாா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar