BREAKING NEWS

இலங்கை முஸ்லிம்கள் குறித்து, கடும் விமர்சனம்..!


(மிகமுக்கியமான குறிப்பு - முஸ்லிம்களினால் தமிழ்நாட்டிலிருந்து இயக்கப்படும் ஒரு முஸ்லிம் சார்பு பேஸ்புக்கிலிருந்து பெறபட்டதே இது)

இலங்கை சகோதரர்களின் கவனத்திற்கு.....!!

இப்பதிவு எல்லா இலங்கை சகோதரர்களுக்கும் பொருந்தாது, சில அரைகுறை லூசுகளுக்கு மட்டுமே...)

நமது மீடியாவில் மழை வெள்ளம் சம்பந்தமாக வெளியிடக்கூடிய பதிவுகளுக்கு இலங்கையை சேர்ந்த சில இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் இப்படி விளம்பரம் தேடுகிறீர்கள், விளம்பரம் தேடுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்று எல்லா பதிவுகளிலும் பின்னூட்டம் இடுகிறார்கள்.

இலங்கையில் உள்ள அரசியல் சூழல் வேறு இந்தியாவிலுள்ள அரசியல் சூழல் வேறு....

சின்ன நாடான இலங்கையில் எண்ணற்ற முஸ்லிம் எம்பிக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டே இருப்பார்கள்.

மேலும் முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயம் போன்ற தோற்றத்தை 100 ஆண்டுகளாக இந்துத்துவ இயக்கங்கள் செய்து வருகின்றன. இந்துத்துவ இயக்கங்களுக்கு பக்கபலமாக இந்திய ஊடகமும் செயல்பட்டு வருகின்றன.

இந்துத்துவ இயக்கங்களின் 100 ஆண்டுகால பொய் பிரச்சாரத்தையும், இந்திய ஊடகங்களின் பொய் பிரச்சாரத்தையும் இந்த மழை ஒரே வாரத்தில் வரலாற்றையே மாற்றி விட்டது.

உங்கள் நாட்டில் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி விசாவை ரத்து செய்த பி.ஜைனுல் ஆபிதீன் உருவாக்கியுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் ஒரு மாதத்திற்கு தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் நடத்தினர்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை, இஸ்லாம் அன்பை போதிக்கும் மார்க்கம் என்று ஒரு மாத காலம் மாநிலம் முழுவதும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, பிட் நோட்டீஸ், வாள்போஸ்டர், பேஸ்புக், தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று கோடான கோடி ரூபாய் செலவு செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஊடகங்களின் ஆதரவு இஸ்லாமியர்களுக்கு இல்லாததால் அப்பிரசாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, வெகுஜென மக்களுக்கு சென்றடையவில்லை,

ஆனால் இந்த மழை ஒரே வாரத்தில் இந்துத்துவ இயக்கங்களின் 100 ஆண்டுகால பொய் பிரச்சாரத்தை தரைமட்டம் ஆக்கிவிட்டு இந்திய ஊடகங்களின் முகத்திரையையும் கிழித்து எரிந்து விட்டது.

அதற்கு காரணம் முகநூல் வாயிலாக செய்யப்படும் பிரச்சாரமே காரணமாகும்.

ஆகையால் இந்திய இஸ்லாமியர்களின் அரசியல் சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள் இல்லையென்றால் குறைந்த பட்ச அமைதியாவது கடைபிடியுங்கள்,

இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றால் இந்திய முஸ்லிம் ரோட்டிற்கு வருகிறான், இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு நன்மை என்றால் இலங்கை முஸ்லிம் குறைந்தபட்சமாக வாயை பொத்திக்கிட்டுக்கூட இருக்க முடியாதா ..?

நீங்கள் என்னமோ மலக்குமார்கள் வீட்டிற்கும் பக்கத்து வீட்டில் பிறந்தது போல் ஹதீஸை தூக்கி கொண்டு வருகிறீர்கள், குர்ஆன் என்றால் ஹதீஸ் என்றால் என்ன என்பதெல்லாம் உங்களுக்கே கற்றுக்கொடுத்தது நாங்கள் என்பதை நினைவுப்படுத்தி விட்டு அந்த ஹதீஸ் சம்பந்தமான இலங்கை அரைகுறை லூசுகளுக்கு விளக்கமும் கொடுத்து விடுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜக்காத் நிதியையே பொதுவான ஒரு நபரை நியமித்து தான் வசூலித்து வரச்சொன்னார்கள், அவ்வாறு வசூலிக்கப்பட்ட நிதியை பொதுஇடத்தில் வைத்து தான் ஏழைகளுக்கு விநியோகம் செய்தார்கள்.

ஆகையால் உங்களுடைய அரைகுறை மார்க்க அறிவை தூக்கி வீசிவிட்டு இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்து தூய இஸ்லாத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்,

இலங்கையை சேர்ந்த சிங்கள மொழி பேசக்கூடிய புத்த மத சகோதரன் கூட இந்திய இஸ்லாமியர்களின் பணியை கண்டு மெய் சிலிர்த்து பேசும்போது இலங்கை முஸ்லிம்களின் செயல்கள் முகம் சுளிக்க வைக்கிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar