மத்திய கிழக்கு நாடுகளுக்கு புனித பயணம் செல்வோர் பயங்கரவாத குழுக்களுடன் இணைவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச நாடுகளின் புலனாய்வு தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதற்கமைய நாமும் ஆராய்ந்து வருகின்றோம்.
எனினும் அண்மையில் இலங்கையை சேர்ந்த 36 முஸ்லிம் நபர்கள் இரகசியமாக சிரியாவை சென்றடைந்துள்ளனர். அவர்களில் பலர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.
அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இஸ்லாமிய புனித பயணம் மேற்கொண்டு செல்வதாக கூறிக் சிறுவர்களும், பெண்களும், வயதானவர்களும் இவ்வாறு பயங்கரவாத குழுக்களை சென்றடைவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனினும் இவர்கள் அனைவரும் ஒன்றாக பயனித்தார்களா, அல்லது தனித்தனியாக பயணித்தார்களா என்பது தொடர்பில் எமக்கு தெளிவான தகவல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

Post a Comment