2014 ம் ஆண்டு வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சினால் புனர்வாழ்வு பெற்ற போராளிகள், தடுப்பு காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்வருடம் 2016 ம் ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் ஐந்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய 500 பேருக்கு மாவட்டத்துக்கு 100 பேர் வீதம் வழங்கப்பட்டு வருகின்றதது இத்திட்டத்துக்கான கிளிநொச்சி மாவட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு A9 வீதியில் அமைந்துள்ள பிரதேச செயலக பயிற்சி நிலையத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதி பிள்ளை, கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மதகுருமார்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
அதன்போது தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படவிருக்கும் வாழ்வாதார உதவிகள் மற்றும் அவர்களின் தேவைகள் சம்பந்தமாக பரிசீலிக்கப்பட்டது.
Post a Comment