---⭐⭐---
(2016/07/24)
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று கண்டி (லைன் பள்ளி) பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்ற நிர்வாக குழு தெரிவு கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிர்வாக குழு உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள 23 ஜம்மியா கிளைகளை சேர்ந்த தலைவர்,செயளாலர், பொருளாளர் என மூவர் வீதம் 69 பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களது வாக்களிப்பின் மூலம் ஜம்மியாவின் தலைவராக அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி , உப தலைவராக அஷ்ஷெய்க் அகார் முஹம்மது , செயலாளராக அஷ்ஷெய்க் முபாரக் மவ்லவி பொருளாளராக அஷ்ஷெய்க் கலீல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment