அகில
இன நல்லுறவு ஒன்றியத்தினால் மன்னார் மாவத்திலுள்ள சமூகசேவையாளர்களுக்கான
சாமஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மன்னார் நகரசபை
மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வின்
பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட
அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள்
கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மன்னார்
மாவட்டத்தின் தன்னலம் பாராத சமூகசேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்
அவர்களுக்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உரையாற்றுகையில்...
சமூகத்தில்
நாம் புகழையும் விருதுகளையும் நோக்கியதாகத்தான் எமது சேவைகள்
இருக்குமென்றால் அது சமூகசேவையல்ல, மாறாக எந்தவித சுயலாப நோக்கமுமின்றி
எம்மால் சமூகத்திற்கு சேவை செய்ய முடியுமானால் அதுவே சமூக சேவை.
இந்த
நிகழ்வில் கௌரவிக்கப்படும் நீங்கள் தன்னலமற்ற, புகழை எதிர்பார்க்காமல்
சேவையாற்றிவர்கள் என்றே நான் கருதுகின்றேன் அதனால்தான் இந்த கௌரவிப்பு
நிகழ்வு உங்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உங்களது சேவை
இனிவரும்காலங்களிலும் தொடரட்டும் என தொடரட்டும் என அவர் தெரிவித்தார்.
குறித்த
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உட்பட, மாகாண சபை
உறுப்பினர்கள்,மதகுருமார்கள், சமூகசேவையாளர்கள், ஊடகவியலார்கள், மக்கள், என
பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment