காணாமல் போனோரை கண்டறியும் சட்ட மூலத்தை உலமா கட்சி வரவேற்பதுடன் இச்சட்ட மூலம் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்த இராணுவத்தையும், அரசியல் தலைவர்களையும் பழி வாங்குவதாக அமையாமல் 78ம் ஆண்டு முதல் காணாமல் போன தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் பற்றி நியாயமாக ஆராயக்கூடிய வகையில் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் மேமலு; குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த அரசாங்கத்தில் காணாமல் போனோரை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. ஆனாலும் அதன் மூலம் எதனையும் கண்டு பிடிக்கப்பட்டதாக காண முடியவில்லை. இந்த நிலையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்பு;குரிய விடயமாகும்.
ஆனாலும் இந்த நாட்டில் காணாமல் போனோர் என்ற வரலாற்றை ஆரம்பித்து வைத்தது ஐக்கிய தேசிய கட்சியாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 1978ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரையான யுகம் மிகப்பெரிய இருண்ட யுகமாகும். இந்த கால எல்லையில் ஜே வி பி கிளர்ச்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் காணாமல் போயினர். அதே போல் 1983 ம்ஆண்டு கலவரத்தில் கொழும்பு மற்றும் மலையக தமிழர் மற்றும் முஸ்லிம்கள் பலர் காணமல் போயினர். 1985 முதல் கிழக்கு மாகாணத்தில் தமிழ் விடுதலைப்புலிகளாலும் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து கிழக்கு மாகாணத்தை ஆளும் தமிழ் கட்சிகளாலும் பல அப்பாவி முஸ்லிம்கள் கடத்தப்பட்டு காணமல் போயினர். அதே போல் சரத் பொன்சேகாவின் தலைமையில் இறுதி யுத்தம் மேற்கொள்ளப்பட்ட போது சில அப்பாவி தமிழ் மக்களும் காணாமல் போயுள்ளனர்.
ஆகவே மேற்படி சட்ட மூலத்தின் மூலம் காணாமல் போன அனைத்து மக்கள் சம்பந்தப்பட்டதையும் அதன் ஆரம்ப நிகழ்விலிருந்தே ஆராயப்பட்டு அவற்றுக்கான முடிவுகள் எட்டப்படுவதே நியாமானதாக இருக்கும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
இந்த வகையில் ஒரு நியாயமான நடவடிக்கை இதன் மூலம் அமையாமல் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனோரை மட்டும் ஆராய்வதாக அமையுமாயின் மேற்படி சட்ட மூலம் என்பது சிலரை மட்டும் திருப்திப்படுத்துவதற்காக இராணுவத்தையும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அரசியல் தலைவர்களையும் பழி வாங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டமாகவே கருதப்படும். இத்தகைய நிலை தங்களது ஆட்சியில் நடைபெறாது என நம்புகிறோம் என உலமா கட்சித்தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment