BREAKING NEWS

கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா


கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் எழுதிய மனசெல்லாம் மகிழ்கிறது, துணிந்து நில், சின்னப் பாப்பா ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் அதிபர் எஸ். முகம்மட் தலைமையில் நடைபெற்றது. அதிதிகளாக நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர். ஹில்மி மஹ்ரூப், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரீ. கபீபுள்ளா, கிழக்குப் பல்கலைக் கழக விவசாயப் பீடத் துறைத் தலைவர் எஸ்.எம். நாபீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதற் பிரதியை ஜாவா ஜூம்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எம். நபீர் மௌலவி பெற்றுக் கொண்டார். 

தகவலும் படமும் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar