BREAKING NEWS

இரணமடு பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா

இரணமடு பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட 
அமைச்சர் பைஸர் முஸ்தபா
( ஐ. ஏ. காதிர் கான் )

ஜனாதிபதி பதவியேற்று, இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள 2017 ஜனவரி 8 ஆம் திகதி முதல், பெப்ரவரி முதலாம் திகதி வரை, நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தித் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வட மாகாண அபிவிருத்தித் திட்டப் பணிகள்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையில், 19 ஆம் திகதி வவுனியாவிலும், 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
வட மாகாண அபிவிருத்தித் திட்டப் பணிகளின் ஒரு அங்கமாக, இரணமடு பிரதேசத்தில் 40 மில்லியன் ரூபா செலவில்  அமைக்கப்பட்டு, தற்போது பூர்த்தியாகும் நிலையிலுள்ள பாரிய பாலத்தின் நிர்மாணப் பணிகளையும் அமைச்சர் நேரில் சென்று  பார்வையிட்டதுடன், பாலத்தின் ஆரம்ப நுழை வாயிலையும் சம்பிரதாயப்  பூர்வமாகத் திறந்து வைத்தார். பாலத்தின் எஞ்சிய வேலைகளைத் துரிதமாக முடிக்குமாறும் அமைச்சர்  அதிகாரிகளையும் பொறியியலாளர்களையும் பணித்தார். இதன்போது, இரணமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகளையும் அதிகாரிகள் சகிதம் சென்று பார்வையிட்டார். இந் நிகழ்வில், அமைச்சருடன் வன்னி மாவட்ட பா.உ. காதர் மஸ்தான் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள்,  பிரதேச அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.                                           ( ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar