பொத்தானை பிரதேச பள்ளவாசல் தொல்பொருள் திணைக்களத்துக்குரியதென்ற முடிவை நீக்காமல் பள்ளிவாசலுக்கு வெளியார் செல்லும் தடையையும், பெயர் பலகையையும் மட்டும் நீக்குவதாக கூறுவது முஸ்லிம் காங்கிரசும்; தொல் பொருள்; திணைக்களமும் இணைந்து முஸ்லிம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்ததாவது, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லிம் விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என்பதை கட்சி என்ற வகையில் உலமா கட்சி மட்டுமே பேசி வருகிறது. முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கெதிராக உலமா கட்சி குரல் கொடுப்பதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கொஞ்சமாவது சமூகம் பற்றி அக்கறை கொள்கின்றனர்.
இந்த வகையில் பொத்தானை பள்ளிவாயல் தொல்பொருள் திணைக்களத்துக்குரியது என அரசு பொதுபலசேனாவின் ஆலோசனையை பெற்று அறிவித்த போது அதனை பகிரங்கமாக கண்டித்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும்.
அதன் பின் மேற்படி பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த ரஊப் ஹக்கீம் விரைவில் மேற்படி பள்ளிவாயல் தொல்பொருள் திணைக்களத்திலிருந்து விடுவித்து தரப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரால் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் மேற்படி பள்ளிவாயலுக்கு வெளியார் செல்வதற்கான தடையும், பெயர்ப்பலகையையும் நீக்குவதாக மட்டுமே தொல்பொருள் திணைக்களம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னமும் மேற்படி பள்ளிவாயல் தொல்பொருள் திணைக்கத்துக்குரியது என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகும் தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிகிறது.
எனவே இது முஸ்லிம்களின் இந்த ஆட்சிக்கெதிரான நிலைப்பாட்டை திசை திருப்புவதற்காக அரசும் ரஊப் ஹக்கீமும் இணைந்து மேற்கொள்ளும் ஏமாற்று நடவடிக்கையாகவே உலமா கட்சி காண்கிறது. உண்மையாக சொல்லப்போனால் தொல்பொருள் திணைக்களத்துக்குரியது என அத்திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பூர்வீக இடங்கள் தொல் பொருள் திணைக்கத்துக்குரியவை அல்ல, அவை முஸ்லிம்களுக்குரியவை என்ற பகிரங்க அறிவித்தலை தொல் பொருள் திணைக்களம் விடுப்பதன் மூலமே எதிர் காலத்திலும் இவை சுவீகரிக்கப்படாது என்ற உத்தரவாதம் கிடைக்கும். எனவே இதற்குரிய நடவடிக்கையை அம்பாரை மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுக்கின்றது.

Post a Comment