அஷ்ரப் .ஏ சமத்)
பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான்.
பிரதம
மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் மற்றும் கல்வியமைச்சருடன் அண்மையில் நான்
கலந்துரையாடும்போது 300க்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியா்கள் வெற்றிடம்
நிலவி வருவதாகவும் இறுதியாக 2008ஆம் ஆண்டுக்குப்பிறகு முஸ்லீம்
பாடசாலைகளில் மாா்க்கக் கல்வியை போதிப்பதற்கு மௌலவி ஆசிரியா்கள் இல்லாமை
பற்றி சுட்டிக்காட்டினேன். . அதற்காக உரிய பரீட்சையை நடாத்துவதற்கும் உரிய
தகமை, புள்ளி அடிப்படையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சா்
உறுதியளித்திருந்தாா். என பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான்
தெரிவித்தாா்.
மேற்கண்டவாறு மருதானையில் உள்ள
அல் ஹிதாய பாடசாலையின் நடைபெற்ற அகதியா 30வது ஆண்டு விழாவின் போது
உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் தெரிவித்தாா்.
கொழும்பு
மத்திய பிரதேசத்தினை அண்டி வாழும் சிங்கள தமிழ் முஸ்லீம் பாடசாலைகளில்
கற்கும் 500க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவ மாணவிகளது மாா்க்கப் பாடாசலையான
அகதியா பாடசாலையின் 30வது ஆண்டு விழா இன்று (29)ஆம் திகதி மருதானை
அல்-ஹிதாய பாடசாலையின் பஹருதீன் ஹாஜியாா் மண்டபத்தில் மேற்படி நிகழ்வு
நடைபெற்றது. இந் நிகழ்வுகள் கல்லுாாி அகதியா பாடசாலை அதிபா் ரம்சி
தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், மேல் மாகாண சபை
உறுப்பிணா்கள் மொஹமட் பாயிஸ், அர்சாத் நிசாம்தீன், கல்லுாாி அதிபா் எம்
நிகாா், கொழும்பு அகதியா பாடசாலைகளின் தலைபா் எம். சருக் ஹாஜி, மற்றும்
அல் ஹிதாயா பாடசாலையின் பழைய மாணவா் சங்கத்தின் தலைவா் எம். பவார்தீன்
ஹாஜியாரும் கலந்து கொண்டனா்.
அத்துடன் பாடசாலை
மாணவா்களது இஸ்லாமிய நிகழ்வுகளும் மாணவத் தலைவா்களுக்கு சின்னம்
சூட்டுதல், 500 மாணவா்களுக்கும் அகதியா பாடசாலை புத்தகப் பைகளும் வழங்கி
வைக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் தொடா்ந்து அங்கு உரையாற்றுகையில்
கொழும்பில்
மத்தியில் ஆண்களுக்காக ஒரு தேசிய பாசாலை அமைப்பதற்கு பிரத மந்திரி
அனுமதி அளித்துள்ளாா். ஆனால் கடந்த பல மாதங்களாக அதற்காக அரச காணியொன்றை
அடையாளம் காணமுடியாமல் உள்ளது. கொழும்பில் வாழும் முஸ்லீம்களின்
பிள்ளைகள் நுாற்றுக்கு 70 வீதம் சிங்கள மொழி மூலமே கல்வி கற்கின்றனா்.
நாம் கொழும்பு மத்தியில் வாழுகின்றோம். 50 மீட்டருக்கு அப்பால் உள்ள
மருதானை தொழில் நுடப்பக் கல்லுாாியில் எத்தனை பேர் அங்கு சென்று
பயிற்சிநெறிகளை பயின்றுள்ளேன், எமக்கு மருதானை டெக்கினிக்ல் சந்தி என்று
மட்டும்தான் தெரியும். ஆனால் கடந்த 150 வருட காலமாக கம்பஹா, களுத்துறை
கேகாலை மாவட்டத்தில் இருந்து காலையில் உணவுப் பா்ா்சலைக் எடுத்து அரசாங்க
தொழில் நுடப்பக் கல்வியில் ஒரு இரு வருடம் கற்று அரசாங்க தணியாா் துறைகளில்
பாரிய ஊதியத்தினை பெறுகின்றனா். அங்கு 150க்கும் மேற்பட்ட டிப்ளோமா,
பொறியில், முகாமைத்துவ , கணக்கியல் அரச செலவில் இலவசமாக கற்கக் கூடிய
வசதிகள் உண்டு. நாம் இந்த மருதானை தொழில்நுட்பக் கல்லுாாி அருகில்
வாழ்ந்தாலும் அங்கு சென்று கற்கவில்லை. நாம். க. பொ. சா. த. மற்றும்
உயா் தரப் பரிட்சையில் சித்தி பெறாவிட்டால் தொழில்நுட்பக்க
கல்லுாாிகளுக்குச் சென்று கற்க முயற்சிப்பதில்லை. நமது பிரதேச வளங்களை
வேறு மாவட்ட பெரும்பாண்மைச் சமுகம் அனுபவிக்கின்றனா். நாம் தினமும்
முச்சக்கர வண்டி, அல்லது நடைபாதை வியாபாரிகளாகவே மாறுகின்றோம். இனியாவது
எமது முஸ்லீம் பெற்றோா்கள் எமது இளைஞா்களை தொழில் நுட்ப யுகத்திற்கு
செல்வதற்கு வழிகாட்டுங்கள். அல்லது பிரதம மந்திரியின் கீழ் உள்ள இளைஞா்
சேவை மண்றத்தின் தொழில்நுடப் கல்விக்கு அனுப்பி வையுங்கள் உரிய காலத்தில்
விண்ப்பியுங்கள் என வேண்டிக் கொண்டாா்.
அல்ஹிதாயா
பாடசாலையை பெண்கள் பாடசாலையாகவும், மாளிகாவத்தை தாருஸலாம் ஆண்கள்
வித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பில் பெரும்பாலான
பெற்றோா்கள் சிங்கள மொழி மூலமே தமது பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு
சோ்கின்றனா். இதனால் முதலாம் வகுப்பு அனுமதி பாரிய பிரச்சினையாக கொழும்பு
மத்தியில் உள்ளது. கொழும்பில் மேலும் பாடசாலைகள் உருவாக வேண்டும். அரச
காணிகளை அறவே அற்ற பிரதேசமாக கொழும்பு உள்ளது.
எமது
முஸ்லீம் இளைஞா்கள் பெரும்பாலோனோா் சிரைச்சாலைகளில் உள்ளனா். அவா்கள்
போதைப்பொருள் பாவிபப்பதில்லை, விற்பனை செய்யவும் இல்லை அதனை விற்பதற்கும்
சந்தைப்படுத்தலுக்கும், அதனை எடுத்துச் செல்வதற்கும் முச்சக்கர வண்டிகள்
ஊடகா உதவியது. என்ற போா்வையினாலேயே வருடக் கணக்கில் சிறையில் வாடுகின்றனா்.
இந்த சமுகம் தொடா்ந்து இவ்வாறு செல்லாமால் தமது வாழ்க்கைத் தரத்தினை
உயா்த்திக் கொள்ள வேண்டும. என பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான்
அங்கு உரையாற்றினாா்.

Post a Comment