( மினுவாங்கொடை நிருபர் )
மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், (31) செவ்வாய்க் கிழமை பிற்பகல் ஒரு மணி முதல், கல்லொழுவை - அழுத் மாவத்தை, முனாஸ் ஹாஜி விளையாட்டுத் திடலில், வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இஸ்தான்புல் ( பச்சை ), குருதுபா ( நீலம் ), பக்தாத் ( சிவப்பு ) ஆகிய இல்லங்களுக்கு இடையில் நடைபெறவுள்ள இவ்வில்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில், மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. டப்ளியூ. ஆர். பெரேரா பிரதம அதிதியாகவும் மற்றும் கல்வி அதிகாரிகள், கல்விமான்கள் பலர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment