BREAKING NEWS

இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை

காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் கவனத்திற்கு…!

இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை?
தமிழ் பேரவையுடனான சந்திப்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததா காத்தான்குடி சம்மேளனம்?

கடத்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழ் பேரவைக்கும் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச்சந்ததிப்பில் தழில் அரசியல் தீர்வு தொடர்பிலும்,முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பிலும் விரிவாக பேசப்பட்டதாக அறியக்கிடைக்கிரது.

ஆனால் இந்த சந்திப்பை வைத்து தமிழ் தரப்பு ஊடகங்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முஸ்தீபு செய்வது கவலையான விடையமாகும்.

மதங்களுக்கும்,சமூகங்களுமிடையிலான நல்லினக்க சந்திப்புக்களை வைத்து
தமிழ் ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக திரிவு படுத்தி தங்களது இலக்குகளை எட்ட நினைப்பது தொடர்பில்  காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனம்  கவனத்திகொள்ள வேண்டும்.

குறித்த சந்திப்பில் முஸ்லிம் ஊடகவியளார்களின் மூத்த ஊடகவியளார் MSM நூர்தீன் மாத்திரமே கலந்து கொண்டுள்ளார்.  குறித்த சந்திப்பு தொடர்பான செய்தியை தேசிய பத்திரைகளான (தினகரன்,வீரகேசரி) போன்ற அச்சு ஊடகம்களுக்கு அனுப்பியுள்ளார்.

தினகரன் பத்திரிகையில் நூர்தீன் அவர்களின்  செய்தி வெளியிடப்பட்டிருந்தது ஆனால் வீரகேசரி பத்திரிகையில்  குறித்த சந்திப்பு தொடர்பிலான செய்தியை திரிவு படுத்தி வேறு ஊடகவியலளாரின் பெயரின் வெளியிட்டிருப்பது  வீரகேசரி பத்திரிகையின் நம்பிக்கை தன்மை மேலும் கேள்விக் குறியாக்கியிருக்கிரது.

குறித்த சந்திப்பில் " இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை" என்று எந்த வித இணக்கமும் எட்டப்படாத நிலையில் இந்த செய்தியை வீரகேசரி வெளியிட்டிருதன் மூலம்
முஸ்லிம்களுக்குள்  ஒரு குழப்ப நிலையை உறுவாக்கியுள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் உட்பட பல புத்திஜீவிகள் இந்த செய்தி கவனத்தில் எடுத்து இதன் உண்மை தன்மையின் தெளிவின்மையால் காத்தான்குடி பள்ளிவாயல் நிறுவனம் தொடர்பில் தங்களது அதிருப்தியை  வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிரது.

ஆகையால் குறித்த சந்திப்பு தொடர்பில்  திரிவு படுத்தப்பட்டு செய்திகள் வெளிடப்பட்டிருப்பதால் இந்த சந்திப்பு தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவங்களின் சம்மேளனம் ஒரு விரிவாக அறிக்கையை ஊடகம்களுக்கு வெளியிட்டு தங்களது நிலைப்பாட்டை தெளிவுடுத்திகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar