Kalmunai Rafeek
மக்கள் செல்வாக்குள்ள கட்சியின் மூலம் அரசியல் முகவரியை பெறாத ஒருவர் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்து அதனை வளர்த்தெடுப்பது சாதாரண விடயமல்ல. இந்த நிலையில் நிறைய பணம் தேவை. இதனை கட்சியின் ஆதரவாளர்கள் வழங்க வேண்டும் அல்லது வழங்கி வைக்க உழைக்க வேண்டும். இப்படித்தான் முஸ்லிம் காங்கிரஸ் வளர்த்தெடுக்கப்பட்டது.
ஆனால் உலமா கட்சியை பொறுத்தவரை இத்தகைய நிதி உதவி எதுவும் இல்லாமல் தலைவரின் தனிப்பட்ட பொருளாதார உதவியை வைத்தே வளர முயற்சித்து வருகிறது.
கடந்த ஆட்சியில் மஹிந்தவுக்கு ஆதரவாக 2005 முதல் உலமா கட்சி செயற்பட்ட போதும் அக்கட்சியை வளர்ப்பதற்குரிய எந்த உதவியையும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு செய்யாதது பெரும் தவறாகும். நிதியுதவி மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுக்கான பதவிகள் என எதுவும் வழங்கப்படவில்லை. அலவி மௌலானா போன்றோர் முஸ்லிம் காங்கிரஸ் போன்றோர் தமக்கு இருந்தால் அது போதும் என மஹிந்த தரப்பு நினைத்தது. கடைசியில் முஸ்லிம் காங்கிரஸ் காலை வாரிய போதுதான் முழித்தார்கள்.
ஒரு கட்சி செயற்பட வேண்டுமாயின் அவசியம் பணம் தேவை. கூட்டங்கள், மாநாடுகள், சந்திப்புக்கள் என நடைபெறுவதாயின் அதற்கான ஏற்பாடுகள், ஏற்பாடு செய்யும் அங்கத்தவர்களின் செயற்பாடுகளுக்கு அவசியம் பணம் தேவை. இதற்காக ஒரு அரசியல் கட்சி பணம் வசூலிப்பது அல்லது தாம் ஆதரவு வளங்கும் பெரிய கட்சியிடம் பணம் பெறுவது தவறல்ல. ஆனால் மக்களின் வாக்குகளை பேரம் பேசி பணத்துக்கு விற்பதுதான் மோசமான செயலாகும். அதுவும் அப்பணத்தை சிலர் சுருட்டிக்கொண்டு விடுவது மிகப்பெரிய துரோகமாகும்.
இப்போதெல்லாம் பலர் உலமா கட்சி மஹிந்தவுக்கு ஆதரவாக பேசுவதால் மஹிந்த பணம் கொடுத்திருப்பார் என நினைக்கிறார்கள். எழுதுகிறார்கள். அவ்வாறு மஹிந்த பணம் கொடுத்திருந்தால் இந்நேரம் உலமா கட்சி பாரிய வளர்ச்சியை பெற்றிருக்கும். குறிப்பாக கிழக்கில் அதீத செல்வாக்கை பெற்றிருக்கும்.
அத்துடன் பல பாரிய கூட்டங்களை பல இடங்களிலும் நடத்தியிருக்கும். மாறாக மஹிந்த தரப்பு ஒரு சதமும் பணம் கொடுக்காததால் ஊடக அறிக்கையுடன் உலமா கட்சியின் செயற்பாடு சுருங்கியுள்ளது. ஆனாலும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மஹிந்தவின் பெறுமானத்தை உலமா கட்சித்தலைவர் தனது எழுத்துக்கள் மூலம் ஊடக மயப்படுத்தியதால் தற்போது மஹிந்த ராஜபக்சவின் தேவையை உணரச்செய்துள்ளமை உலமா
கட்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.
K

Post a Comment