இலங்கையில் உள்ள அத்தனை கட்சிகளுக்குள்ளும் பிரச்சினைகள்தான் இருந்து கொண்டுவருகின்றது.
ஐ.தே.கட்சியை எடுத்துக்கொண்டாலும் சரிதான், ஸ்ரீ்.ல.சுதந்திரக்கட்சி என்றாலும் சரிதான்,தமிழர்களின் கட்சி என்றாலும் சரிதான் எல்லாக்கட்சிக்குள்ளும் பிரச்சினைகள்தான் இருக்கின்றது அதனை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
அந்த வகையில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ், அ.இ.ம.காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் உள்ளது.
இந்த கட்சிகளில், குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சிதான் இந்த ஸ்ரீ்.ல.முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியாகும், இந்த கட்சி மற்றகட்சிகளைப்போல், பத்தோடு பதினொன்றான கட்சி அல்ல.
இவர்கள் அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள், ஏனென்றால் அவர்களின் பெயரை சொல்லித்தான் மக்களிடம் வாக்கு கேட்டுபெற்று பாரளுமன்றம் சென்றவர்கள் இவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த கட்சியை வழிநடத்துபவர்கள் மிகவும் தூய்மையானவர்களாகவும், வேற்றுமத கட்சிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து காட்டுவது மட்டுமல்ல, இதன் மூலம் தூய இஸ்லாத்தின் புனித தன்மையையும், கட்டுக்கோப்புக்களையும் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுவதற்கு தகுதியானவர்களாகவும், அதனை செயல்படுத்தி காட்டக் கூடியவர்களாகவும் இருக்கக்கூடியவர்கள் ஆவார்கள்.
இப்படியான கட்சியை வழிநடுத்துபவர்கள் மற்றவர்களைப்போல் "ஹராமான" செயல்களில் ஈடுபடவும் கூடாது, அதற்கு துணைபோவதும் கூடாது.
அந்த வகையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அண்மைக்காலமாக பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன,
அந்த வகையில் "தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்" என்ற புத்தகம் வெளியாகியுள்ளது, அது பல ஆதார ஆவணங்களை பதிவேற்றம் செய்துவிட்டு, அந்த கட்சியின் முக்கியமானவர்களை குற்றவாளியாக சுட்டிகாட்டி நிற்கின்றது.
அதே நேரம் அந்த கட்சியின் தவிசாளராக இருந்த முக்கிய நபர் ஒருவர், அந்த கட்சியின் தலைவரின் தூய்மை அற்ற நடவடிக்கைளின் ஆதாராங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதனை கூடிய விரைவில் ஆதாரத்தோடு வெளியிடுவேன் என்றும் கூறிக்கொண்டும் இருக்கின்றார்.
அவருடைய இந்த மிரட்டலை, அந்த தலைவரின் ஆதரவாளர்கள் இது வேண்டுமென்று, அவர் எங்கள் தலைவர் மேல் சுமத்தும் குற்றச்சாட்டு என்று கூறுகின்றார்கள்.
இந்த குற்றச்சாட்டை சுமத்துபவர் சாதாரண ஒருவர் கிடையாது, அவர் இப்போதும் அந்த கட்சியின் தவிசாளராக இருப்பவர், அவர் மாபெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளார், இந்த குற்றச்சாட்டுக்கள் வேண்டுமென்றே அவரினால் பொய்யாக கூறப்பட்டால், அந்த குற்ச்சாட்டுக்கு இலக்காகின்ற தலைவர் அவர்கள் கடும் நடவடிக்கையில் இறங்கி இருக்கவேண்டும்.
இது தனது மானம் சம்பந்தப்பட்டவிடயம் ஆகையால், இவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு எத்தனை காலம் தேவைபடும் என்று கேட்க தோன்றுகின்றது.
நீதிமன்றம் சென்றால், அவர் கூறுவது பொய்யாக இருந்தால் அங்கே அவர் மாட்டிக்கொள்ள நேரிடலாம் அதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி அவருடைய தோலை உறித்துக்காட்டலாம்.
அப்படி நீதிமன்றத்தில் அவர் அவரிடம் இருக்கும் ஆதாரங்களை காட்டி தலைவர் மேல் குற்றங்களை நிரூபிப்பாறேயானால், அப்படி குற்றம் செய்யும் மானம்கெட்ட தலைமையை ஏற்றுக்கொள்ளும் தலைவிதி முஸ்லிம் சமூகத்துக்கு கிடையாது என்று நினைக்கின்றோம்.
அதே நேரம் ஏறாவூரில் பேசிய இந்த நாட்டின் ஜனாதிபதியும் கூட எங்கள் ஆட்சியை கவிழ்பதற்கு கூட்டு எதிரணி முயற்சி மேற்கொண்டால் நான் அவர்களின் ரகசியங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுகின்றார்.
இதிலிருந்து என்ன விளங்குகின்றது,...தங்களது பட்டம்,பதவிகளுக்கு எதிராக யார் வந்தாலும்., அவர்களுடைய ஊழல்களையும்.,துர்நடத்தைகளையும் ரகசியமான முறையில் ஆதாரமாக சேகரித்து வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் வரும்போது அதனை பயன்படுத்துவது என்பதாகும்...
நாட்டை ஒருவன் நாசப்படுத்துகின்றான் அதனை மதில்மேல் பூனைபோல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அதனை அனுமதித்துவிட்டு, தங்களுக்கு எதிராக அவர்கள் வரும் போது, தன்னுடைய சுய நலனுக்காக அதனை பயன்படுத்துவதானது, எவ்வளவு மோசமான செயல் என்பதை அவர்கள் அறியாமல் உள்ளது வேதனையான விடயமே...
ஒருவன் நாட்டுக்கும், வீட்டுக்கும் துரோகம் செய்யும் போது அதற்கு உடந்தையாக இருந்துவிட்டு பிறகு அதனை தனது வாசிக்காக பயன் படுத்துபவனும் ஒரு துரோகிதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
இந்த விடயங்கள் மாற்றுமத கட்சிக்காரர்களுக்கு பெரிதாக படாமல் விடலாம்.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இயங்கும் கட்சிகளில் இருப்பவர்கள், இப்படியான விடயங்களில் விதிவிலக்கானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் இருக்கவேண்டும். என்பது எல்லோருடைய விருப்பமாகும், அதனை கவனத்தில் எடுத்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம், இதற்கு நடவடிக்கை எடுக்காமல் "எறுமை மாட்டில் பேய்ந்த மழைபோல்" என்று இருப்பார்களேயானால், இந்த குற்றச்சாட்டு உண்மையானது என்று காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
அப்படி அந்த குற்றச்சாட்டை மூடி மறைத்தீர்களானால்,தயவு செய்து குர்ஆன்,ஹதீஸ் படி நடக்கும் கட்சி என்பதை மாற்றிவிடுங்கள்...ஏனென்றால் அந்த புனிதமான மார்க்கத்தில் நாங்களும் ஒரு அங்கம் என்பதால்....
அது உங்கள் சொந்த மார்க்கம் அல்ல, அதனை வைத்து நீங்கள் விளையாடுவதற்கு....
ஆகவே, இதற்கு தீர்வை காண்பதற்கு,....
நீங்கள் தீர்க்கமான முடிவை கூடிய சீக்கிரம் எடுக்கவேண்டும்....
எம்.எச்.எம்.இப்ராஹிம்...
கல்முனை....

Post a Comment