BREAKING NEWS

டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 30 பேருக்கு மினுவாங்கொடை நீதிமன்றினால் தண்டம்



( மினுவாங்கொடை நிருபர் )

   டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த முப்பது பேருக்கு எதிராக, மினுவாங்கொடை மாவட்ட நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் புரிந்த குற்றத்திற்காக தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.
   வீடுகள், உணவகங்கள் மற்றும் அவற்றின் சுற்றாடலை அசுத்தமாக வைத்திருந்த குற்றத்தின்  பேரில் இவர்கள் மீது, மினுவாங்கொடை நகர சபை மற்றும் பிரதேச சபை பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் இவ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
மினுவாங்கொடை பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் சீலனீ சத்துரந்தி பெரேராவினால் இவர்களுக்கு எதிராக தண்டப் பணம் நியமிக்கப்பட்டது. சுற்றுச் சூழலை டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் வைத்திருந்ததற்கான குற்றங்களை ஒப்புக்கொண்ட முப்பது பேரிடமிருந்தும் தண்டப்பணமாக ஒரு இலட்சத்து 14 ஆயிரம் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டது. மினுவாங்கொடை, நில்பனாகொட, மடம்பெல்ல, வல்பிட்ட, கொட்டதெனியாவ, படல்கம,  மரதகஹமுல ஆகிய பிரதேசங்களில்  வசிக்கும் 30 பேரிடமிருந்தே இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar