ஏ. எச். எம். பூமுதீன்
அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஏ.எல். எம். அதாவுல்லாஹ் மீண்டும் அரசியல் அரங்கில் பேசப்படும் நாமமாக உருவாகியுள்ளது.
சுமார்
13 வருட காலம் அதிகாரமிக்க அமைச்சராக இருந்து - தேர்தலில், அதிலும் சொந்த
மாவட்டத்தில் படுதோல்வியடைந்த அமைச்சர் ஒருவர் இருப்பார் என்றால் அது
அதாவுல்லாவாகத்தான் இருக்க முடியும்.
2015 பொதுத் தேர்தலின் பின்னர் இரெண்டு வருட காலம் அமைதி பேணிவந்த அவரை யாரோ இப்போது உசுப்பேத்திவிட்டுள்ளார்கள்.
அதிகாரமிக்க
அமைச்சராக அதாவுல்லாஹ் இருந்த காலத்தில், ஊடகங்களில் அவர் பெயர் பெரிதாக
அல்லது அறவே அடிபடுவதில்லை. ஊடகங்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ அவர்
அலட்டிக்கொள்ளாததே அதட்கு காரணம்.
"நான்
இருக்கும்வரை எல்லா பாராளுமன்ற தேர்தல்களிலும் நீ வெல்லுவாய்" என்ற
உறுதியான உத்தரவாதம் - உயர்மட்டத்தவரிடம் இருந்து கிடைத்து இருந்ததால் அவர்
ஊடகங்களை அலட்டிக்கொள்ளவில்லை.
அதனால்தான்,
சமூகமே எதிர்த்து நின்ற அந்த உயர் பிரமுகருடன் - அவர்தான் வெல்லுவார் என்ற
அதீத நம்பிக்கையில் அவருக்கு ஆதரவாக நின்றார். இனி அவர் வரமாட்டார் என்பதை
புரிந்துள்ள அதா, மீள மக்கள் ஆதரவைப்பெற ஊடகங்களுக்கு அதிக முன்னுரிமை
வழங்க தொடங்கியுள்ளார்.
அம்பாறை
மாவட்டத்தின் ஒருசிலர் உட்பட வெளிமாவட்ட ஒருசிலருக்கும் அதா எனும் மாயை
இப்போது பீடித்துள்ளது. அம்பாறையில் அதாவுக்கு அதிக செல்வாக்கு
பெருகியுள்ளது என்பதுதான் அந்த மாயை.
உண்மையில் அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தால், அது வெறும் மாயை மட்டுமன்றி, பச்சை பொய்யும் கூட.
13
வருடங்களாக ஊடகங்களின் முன் தோன்றாதவர் இப்போது திடீரென, அடிக்கடி
தோன்றுவதனால் ஏட்பட்ட வதந்திதான் அது என்பதை அதாவுல்லாஹ்வின்ஆதரவாளர்கள்
ஜீரணிக்கமாட்டார்கள் என்பதட்காக உண்மையை மறைக்க முடியாது.
அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் - அம்பாறையில் தனித்து போட்டியிட்டதனால்தான்
அதாவுல்லாஹ் தோல்வியடைந்தார் என்ற கருத்தும் உலாவுகின்றது. அதனையும்
அலட்சியப்படுத்த முடியாது. அத்துடன், மஹிந்த அணியில் போட்டி இட்டதனால்தான்
தோல்வி அடைந்தார் என்ற கருத்தையும் மறக்க முடியாது. மைத்ரி அணி சார்பாக
போட்டியிட்ட ஹிஸ்புல்லாஹ் தோல்வி அடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும்,
நாம் இவ்வாறு அத்தாவின் தோல்விக்கு இரு காரணிகளை முன்வைத்தாலும் அவரின்
ஆதாரவாளர்களோ - அமைச்சர் றிஷாத்தின் வருகைதான் அதாவுல்லாஹ்வின் தோல்விக்கு
காரணம் என்பதில் உறுதியாக இருப்பதோடு புள்ளிவிபரங்களையும்
முன்வைக்கின்றனர்.
மட்டுமன்றி,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராளிகள் என்ற போர்வையில் யாரையோவெல்லாம்
அழைத்து அதாவுடன் இணைந்தனர் என்று புகைப்படம் எடுத்து பிரசுரிக்கின்றனர்.
இது, றிஷாத்தின் வருகைதான் அதாவுல்லாஹ்வின் தோல்விக்கு காரணம் என்ற
அவர்களின் எண்ணத்துக்கு சிறந்த உதாரணம்.
அம்பாறை
மாவட்டத்தின் இன்றைய முஸ்லீம் அரசியல் களநிலவரத்தின் படி- அதாவுல்லாஹ்வின்
மீள் எழுச்சி என்பது சாத்தியமட்ட ஒரு விடயம். அவரது வாக்கு வங்கி என்பது
ரிஷாத் அணிக்கும் ஹக்கீம் அணிக்கும் பிரிந்து விட்டது. அவர்- ஏதோ ஒரு
தேர்தலில் போட்டியிட்டால் " ஊரான்" என்ற ரீதியில் அவரது சொந்த ஊர் மக்களில்
சிலர் அல்லது பலர் வாக்களிக்கலாமே தவிர மாவட்ட ரீதியில் முஸ்லீம், சிங்கள
மக்கள் வாக்களிப்பர் என எதிர்பார்ப்பது தவறானது.
இந்த
இலட்சணத்தில், " எனது தோல்விக்கு காரணமான ரிஷாத்தை தோற்கடிப்பேன்" என்ற
கேட்பார் புத்தி கேட்டு, மடத்தனமாக அதாவுல்லாஹ் சில்லறை செயட்பாடுகளில்
அவர் கால்பதிப்பாராயின் அது அவருக்குள்ள அரசியல் முதிர்ச்சியை
கேள்விக்குட்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
சந்திரிக்கா
என்பவரின் பின் புத்தியால் 11 வருட காலம் அவர் மஹிந்தவால்
பழிவாங்கப்பட்டதும் ( ரணிலின் ஆட்சியை கலைத்தமை)- பேரியலின் பின்
புத்தியால் அவரும் படுதோல்வி அடைந்து முகாவும் சுக்குநூறு ஆனதுபோல்-
இப்போது முல்லையின் மௌலவியாவின் பின் புத்தியால் அதாவுல்லாஹ்வும் இப்போது
அம்பாறையில் உள்ள கொஞ்சநெஞ்சத்தையும் இல்லாமலாகிவிடும் நிலையே
ஏட்படப்போகின்றது.
அம்பாறை
மாவட்டத்தை பொறுத்தவரையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும்
முகாவுக்கும்தான் போட்டி. அதிலும் முகாவின் கடும் போட்டிக்குரிய கட்சி
மக்கள் காங்கிரஸ். ஒருவேளை, முகாவுக்கு அதாவுல்லாஹ் போட்டியாக மாறினாலும்-
மக்கள் காங்கிரசுக்கு முகாவோ அல்லது அதாவுல்லாஹ்வோ ஒருபோதும் போட்டியே
கிடையாது.
அம்பாறையில்
மக்கள் காங்கிரசின் வளர்ச்சி இன்று முன்னேறி வருகின்றது. சமூக ரீதியிலான
அமைச்சர் றிஷாத்தின் செயட்பாடு இளைஞ்சர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.
இந்தநிலையில்,
அதாவுல்லாஹ்வின் வருகை ரிஷாத் அணியினரை அச்சம் கொள்ளவைத்ததன்
வெளிப்பாடுதான் இந்த ஆக்கம் என அதா அல்லது முகா தரப்போ நினைத்தால் அதர்க்கு
நாம் பொறுப்பல்ல.
மண்
குதிரை ஓடாது , அறுந்து போன வேர்களைக்கொண்ட மரமும் துளிர்க்காது என்ற
உண்மையை சொல்லி, இருண்ட யுகத்துக்குள்.சமூகம் அநியாயமாக தள்ளிவிடப்படக்
கூடாது - அதனை தடுப்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.
எது எப்பிடியோ! அல்லாஹ் நாடினால் அதாவுல்லாஹ் வெல்லுவார். அதனை யாராலும் தடுக்க முடியாது.
Post a Comment