ஒரு இனத்தின் மதத்தை அவமதிக்கும் வகையில்
ஹலால் மற்றும் முஸ்லிம் திருமண சட்டம், காதி நீதிவான் பற்றி பொது பல சேனா பேசுவது இனவாதம் என்பதால் இத்தகைய இனவாதிகளை கைது செய்ய பிரதமர் ரணில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி உலமா கட்சி தெரிவித்துள்ளதாவது
அரசியல் யாப்பு திருத்தம் தேவையில்லை என நான்கு மஹாநாயக்கர்களும் தெரிவித்திருக்கும் நிலையில் பொது பல சேனாவோ அரசியல் திருத்தம் செய்வதாயின் முஸ்லிம்களின் ஹலால் மற்றும் முஸ்லிம் திருமண சட்டங்களை நீக்க வேண்டும் என கருத்துத்தெரிவிப்பது பாரிய இன அத்துமீறலாகும்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்கவே அரசாங்கம் அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்போவதாக சொல்லுகின்ற வேளையில் அரச ஆதரவுடன் செயற்படும் பொது பல சேனா முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதை அரசு கண்டிக்க முன் வர வேண்டும்.
அத்துடன் இனவாதம் பேசுவோர் கைது செய்யப்படுவர் என அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஓர் இனத்தை சேர்ந்தோர் இன்னோர் இனத்தின் கவுரவத்தையும் தன்மானத்தையும் கொச்சை படுத்தும் வகையில் பேசுவது இனவாதமாகும். அந்த வகையில் முஸ்லிம்கள் புனிதமாக மதிக்கும் ஹலால், மற்றும் இஸ்லாமிய திருமண சட்டங்களை பற்றி சிங்கள மக்களைக்கொண்ட பொது பலசேனா பேசுவது முஸ்லிம்களை மத ரீதியில் புண்படுத்தும் இனவாதமாகும்.
ஆகவே இனவாதிகள் கைது செய்யப்படுவர் என்ற பிரதமரின் உத்தரவாதத்துக்கமைய பிரதமர் பொதுபல சேனாவின் இத்தகைய பகிரங்க இனவாதத்துக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment