BREAKING NEWS

மகிந்த ராஜபக்ச கொள்ளையடித்தாலும் நாட்டுக்கு சேவைகளை செய்துள்ளார்

மகிந்த ராஜபக்ச 10 ஆண்டுகள் மேற்கொண்ட கொள்ளையடிப்பை விட தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் கொள்ளையடித்துள்ளதாக துறவிகள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் துறவிகள் குரல் அமைப்பு இன்று -13- நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஆனந்த தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச கொள்ளையடித்தாலும் நாட்டுக்கு சேவைகளை செய்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடு தற்போது பாதாளத்திற்கு சென்றுள்ளது. அரசாங்கம் பதவிக்கு வரும் போது கூறிய மாற்றம் இன்று சுமையாக மாறியுள்ளது.

கடந்த 1948 ஆம் ஆண்டு பிறகு ஆட்சி வந்த அரசாங்கங்களில் அதிகளவான அனர்த்தங்களை சந்தித்த அரசாங்கம் தற்போதைய அரசாங்கமாகும்.

நாட்டிற்கு தற்போது தேவையானது புதிய அரசியலமைப்புச் சட்டம் மட்டும் அல்ல. வாழ்வதற்காக முறையே தேவைப்படுகிறது.

நாட்டிற்கு கெடுதி வரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பௌத்த சங்க சபையினரே குரல் கொடுத்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத செயற்பாடுகளை தொடர்ந்தும் பொருத்துக்கொள்ள முடியாது.

மிக விரைவில் மாநாயக்க தேரர்களை சந்தித்து அவர்களின் அழைப்புடன் கூடிய மகா சங்க சம்மேளனத்தை நடத்த போவதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar