- ஜனாதிபதி இன்று திறந்துவைக்கிறார்
( மினுவாங்கொடை நிருபர் )
கம்பஹா - திஹாரிய, அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில், புதிதாக
நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடிக்கட்டிடத் தொகுதி, இன்று (17)
வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ள இன்றைய
நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கல்வி
அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஊடக மற்றும் வெளிநாட்டு பிரதி அமைச்சர்
லசந்த அழகியவண்ண உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தேசிய மற்றும் சர்வதேச
அதிதிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இக்கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க
உறுப்பினர்கள், கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரரிடம், இக்கல்லூரியில் மிக
நீண்ட காலமாக நிலவிவந்த வகுப்பறை இடப்பற்றாக்குறை தொடர்பாக எடுத்துக்
கூறியதன் விளைவாக, இக் கட்டிடத் தொகுதி 212 இலட்சம் ரூபா செலவில், தேரரின்
தனிப்பட்ட நன்கொடையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சமய நல்லிணக்கத்திற்கு
ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, இன்றைய நிகழ்வு அமையவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment