கட்டுநாயக்கவில் சுற்றித்திரிந்த 60 பேர் கைது
நீதிமன்றில் 90 ஆயிரம் ரூபா அபராதம்
( மினுவாங்கொடை நிருபர் )
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1, 500 ரூபா வீதம் 90 ஆயிரம் ரூபாவை அபராதத் தொகையாகச் செலுத்துமாறு, மினுவாங்கொடை பதில் மாஜிஸ்திரேட் நீதவான் பிரியந்தி லியன ஆரச்சி, நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கட்டுநாயக்க வந்து சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் ஆண்கள் என, நீதி மன்ற பதிவேட்டில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் கான்ஸ்டபில் திசாநாயக்க (38226) இம்முறைப்பாட்டைச் செய்திருந்தார்
Post a Comment