BREAKING NEWS

கொழும்பு மேற்கு ஸ்ரீல.சு.க. பிரதான அமைப்பாளராக மன்ஸில் நியமனம்



( மினுவாங்கொடை நிருபர் )

   மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியும், கொழும்பு மா நகர சபையின் ( ஸ்ரீல.சு.க. ) முன்னாள் உறுப்பினருமான சமூகசேவையாளர் முஹம்மத் ஹுசேன் மன்ஸில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதிக்கான பிரதான அமைப்பாளராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்பாளருக்கான நியமனக் கடிதத்தை, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி வழங்கிவைத்தார். அமைப்பாளரின் புதல்வர் ஸ்ரீல.சு.க. யின் மத்திய கொழும்பு இளைஞர் அணிக்குழுத் தலைவர் சப்னி மன்ஸிலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 
   அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள், தனக்கு மாபெரும் சக்தியாக அமைந்துள்ளதாகவும், சுதந்திரக் கட்சியின் இறைமை, செல்வாக்கு,  கெளரவம் என்பவற்றைப்  பாதுகாத்து, கட்சியை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நன்நோக்கில்  என்றும் அர்ப்பணிப்புடன் செயலாற்றப்போவதாகவும் அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar