---------------------------------------------------------------------
கொழும்பில் நாளை (10) நடைபெறவிருந்த கல்முனை தொடர்பான கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னிடம் தெரிவித்தார். அத்துடன் கூட்டத்தை நடத்துவதற்கான அடுத்த திகதி தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது, “நாளை நடைபெறவிருந்த கூட்டத்துக்கான அழைப்பு தனக்கு கிடைக்கவில்லை. இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் சம்பந்தன் ஐயாவே மேற்கொள்கிறார்” எனத் தெரிவித்தார்.
சம்பந்தன் ஐயாவுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது தொலைபேசி செயற்படவில்லை.
இருப்பினும் உள்ளூராட்சி மன்ற வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான முக்கியமான கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை திருமலை செல்கிறார் என்ற உறுதியான தகவல் எனக்குக் கிடைத்தது. –ஏ.எச்.சித்தீ காரியப்பர்
Post a Comment