BREAKING NEWS

மல்வானை தக்கியா பாதை, வடிகான்களை செய்து தருவதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா உறுதி




( ஐ. ஏ. காதிர் கான் )

   முஸ்லிம்கள் செறிந்து வாழும் மல்வானை பிரதேசத்திற்கு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா  (14) ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு, குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்திப் பணிகளை அமைச்சு அதிகாரிகள் சகிதம் பார்வையிட்டார். இதன்போது, மல்வானை - தல்கல,  காதிரிய்யா தக்கியாப் பெரிய பள்ளிவாசலுக்கும் சென்று, காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷேஹ் அஹமட் பின் முஹம்மது ஆலிம் (காதிரிய்யதுன் நபவி) மற்றும்  தக்கியாவின் நிர்வாகிகள்,  தரீக்காவின் (இஹ்வான்கள்) சகோதரர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.  குறித்த தக்கியாவின் பாதை மற்றும் வடிகான்கள் புனரமைப்புப் பணிகள்  தொடர்பில் அமைச்சரிடம் இதன்போது ஆன்மீகத் தலைவரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, அவற்றை முன்னாள் பியகம பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீல.சு.க. அபேட்சகருமான ஏ.சீ.எச்.எம். அன்வர் ஊடாக நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டு,  விரைவில் இப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்து  தருவதாகவும் அமைச்சர் ஆன்மீகத் தலைவரிடம் உறுதியளித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar