BREAKING NEWS

இளம் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


பாறுக் ஷிஹான்


அல்-மீஸான் பெளண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பின் 14 வருட நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட  இளம் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை மஹ்மூத் பாலிகா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று(25) மாலை அமைப்பின்  தவிசாளர் நூறுல் ஹூதா உமர் தலைமையில் ஆரம்பமானது.

இதன் போது   பிரதம அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  முஸ்லிம் விவகார பணிப்பாளர் சிராஸ் யூனுஸ் ஆகியோரும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தூதுவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா  காரைதீவு பிரதேச சபை தவிசாளர்  ஜெயசிரில்  மீஸான் பௌண்டசன் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரி சமாதான நீதவான் அகமட் புர்கான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பல திறமைகளை வெளிக்காட்டிய பல மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar