2019 இல் திறந்து வைப்பு
( மினுவாங்கொடை நிருபர் )
பேலியகொடையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மெனிங் மரக்கறி சந்தையின் பணிகள் யாவும் பூர்த்தியடைந்து வரும் நிலையில், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதில் இதனை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்க முடியும் என, நகர அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பேலியகொடையில் அமைக்கப்பட்டு வரும் மரக்கறி சந்தையின் கட்டுமான வேலைகளில் 75 வீதமான பணிகள், தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இதற்காக, 4600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்ப முறைமையினைப் பயன்படுத்தி, இரண்டு மாடிகளைக் கொண்ட அதி விசால கட்டிடமாக இச்சந்தைத் தொகுதி அமைக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு நகருக்குள் ஏற்பட்டுள்ள வாகன நெறிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், மரக்கறி பாவனையாளர்களுக்கு அதி கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலுமே, இந்தப் பாரிய செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment