BREAKING NEWS

அரசியல் சித்துவிளையாட்டில் அனாதையாக மாறிவரும் அம்பாறை மாவட்டம்.


இலங்கையில் அதிக முஸ்லிங்கள் வாழும் மாவட்டத்தில் முதன்மையானதும், அதிக முஸ்லிம் எம்.பிக்கள் இருக்கின்றதுமான மாவட்டமே இந்த அம்பாறை மாவட்டம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆணிவேராகவும், அந்த கட்சியின் அதிமுக்கிய பதவிநிலை தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வாழும் இடமாகவும் இருக்கும் இந்த மாவட்டம் இன்றும் அரசியல் அனாதையாகவே இருக்கின்றது.


1. சுனாமியால் சகலதையும் இழந்த மக்களுக்கு  சவூதி அரேபியா மக்களின் நன்கொடையாக வழங்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காடாகி பாவனைக்கு உகந்த தன்மையை இழந்து நிற்கிறது.


2. சிலரின் தூர நோக்கு இல்லாத துறைமுக  திட்டத்தின் மூலம் ஒலுவில் எனும் கிராமம் சில வருடங்களில் கடலுடன் சங்கமித்து விடும் நிலைக்கு மாறி விட்டது.


3. கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, சம்மாந்துறை,அட்டாளைச்சேனை, நிந்தவூரின் அபிவிருத்தி திட்டங்கள் இன்றும் கனவாகவே இருந்து வருகிறது.


4. பொத்துவில் மக்களின் குடிநீர் தட்டுப்பாடு , வட்டமடு காணி பிரச்சினை


5. இறக்காமத்தின் மத்தியில் சில வருடங்களுக்கு முன்னர் முஸ்லிங்கள் வாழும் பிரதேசத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.


6.சில பிரதேசங்களின் உள்ளுராட்சி மன்ற அதிகாரம் (சாய்ந்தமருது தனியான சபை, சம்மாந்துறை சபை தரமுயர்த்தல்.)சார்ந்த பிரச்சினைகள்


மேலே பட்டியல் இட்டது போன்று அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசத்திலும் பிரச்சினை கொட்டிக்கிடக்கிறது.


என்றாலும் மு.கா சார்பில் கௌரவ எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ பைசால் காசிம், கௌரவ எம்.ஐ.மன்சூர்,ஆகியோர் மு.கா சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக இருந்தும் மேலதிகமாக மு.கா சார்பில் கௌரவ ஏ.எல்.எம். நசீர், ம.கா சார்பில் கௌரவ எம்.எம். இஸ்மாயில் (முன்னாள் வீ.சி) ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அலங்கரித்துக் கொண்டு இருந்தும் ஆன பலன் எதுவும் இல்லை.


அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள், உரிமை பேனல், போன்ற சகல துறைகளிலும் முஸ்லீம் சமூகம்  இன்று பின்தங்கி நிற்கிறது. முஸ்லிங்களில் 21பேர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கிறார்கள் ஆனால் தேசிய ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முஸ்லிங்களுக்கு நடந்த  நன்மைகள் எதுவும் இல்லை.


இவைகள் எல்லாம் ஒரு புறமிருக்க புதிய நம்பிக்கையுடன் அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் மயிலை ஆதரித்து 33000 வாக்குகளை வழங்கியிருந்தும் ஆன பலன் எதுவும் இல்லை. என்பது மிகப்பெரிய வேதனையே..


அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர்,

தலைவர்,

அல்-மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar