BREAKING NEWS

பெரமுனவுக்கு 'ஹூ' வைத்தாலும் நாம் கிராமங்களுக்குச் செல்லுவோம்

- நாமல் சூளுரை - ஐ. ஏ. காதிர் கான் - எத்தனை சவால்கள், குற்றச்சாட்டுகள் வந்தாலும், கிராமங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இயங்கி வருவதாகவும், 'ஹூ' கூறும் அரசியல் கட்சிகளின் நோக்கம், பொதுஜன பெரமுனவை கிராமத்திற்கு வரவிடாமல் தடுப்பதே எனவும், நாமல் ராஜபக்ஷ நேற்று (23) தெரிவித்தார். "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கிராமங்களுக்கு செல்கிறது" என்று கூறிய நாமல் ராஜபக்ஷ, கொள்கை இல்லாத சில அரசியல் கட்சிகளுக்கு ‘ஹூ’ கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார். கிரிக்கெட்டில் "நடுவர்" அல்லது "ரக்பி" என்றால், "ரெப்ரீ" க்கு 'ஹூ' சொல்லி பழக்கபட்ட சிலர், அவர்களின் அரசியல் கட்சிகள் திவாலாகும் போது, இந்த யுக்திகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கிராமத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கமாகவே, அந்த தந்திரோபாயங்களை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வருவதாகவும் கூறிய அவர், பொதுஜன பெரமுன கிராமத்திற்கு வருவதைத் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 1988 ஆம் ஆண்டு முதல் வீடுகளுக்குத் தீ வைத்த கட்சிகள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும், அவர்களின் தலைமைக்குச் சவாலாக இருப்பவர்கள் தங்களை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திப் போராடுவதாகவும் அவர் குற்றம் சாட்டிப் பேசினர். பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, நாமல் ராஜபக்ஷ (23) மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். 24/01/2024.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar