இஸ்ரேல் மற்றும் ஹிஸ்பல்லா இடையேயான போர்நிறுத்தம்
Posted by aljazeeralanka.com on November 27, 2024 in | Comments : 0
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவுக் குழுவான ஹிஸ்பல்லா இடையேயான போர்நிறுத்தம் புதன்கிழமையன்று அமலுக்கு வந்தது.
இரு தரப்பும் அமெரிக்கா மற்றும் பிரான்சின் தரகு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த மோதலானது அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அமுலுக்கு வந்தது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாயன்று (26) லெபனானில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக போர் நிறுத்த முன்மொழிவை சமர்ப்பித்தார்.
இது 10-1 என்ற வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.
தீவிர வலதுசாரி அமைச்சர் பென் ஜிவிர் மட்டுமே திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.
ஹமாஸ் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் கவனத்துக்கு இந்த போர்நிறுத்தம் உதவும் என்று கூறிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேலும், இந்த ஒப்பந்தத்தை தரகர் செய்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் நன்றி தெரிவித்தார்.
அடுத்த 60 நாட்களில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படையினர் அமைதியான முறையில் திரும்பப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்று பேச்சுவார்த்தைகள் பற்றி அறிந்த ஒரு சிரேஷ்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
லெபனான் புள்ளிவிவரங்களின்படி, 2023 ஒக்டோபரில் இருவருக்கும் இடையிலான மோதல் தொடங்கியதில் இருந்து குறைந்தது 3,823 பேர் இறந்துள்ளனர்.
இதற்கிடையில், இஸ்ரேல் தரப்பில், குறைந்தது 82 இராணுவ வீரர்களும், 47 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment