சாணக்கியன் கூற்று உண்மையா என்பதை ஜனாதிபதி தெளிவு படுத்த வேண்டும்.
Posted by aljazeeralanka.com on December 05, 2024 in | Comments : 0
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக அதற்குரிய அமைச்சின் செயலாளருடன் தான் பேசுவதாக ஜனாதிபதி அநுரகுமார, சாணக்கியன் எம்பி உட்பட்ட தமிழ் கூட்டமைப்பு எம்பீக்களிடம் உறுதி தெரிவித்ததாக சாணக்கிய கூறியுள்ளமை பற்றி ஜனாதிபதி தரப்பு தெளிவு படுத்த வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னரே சாணக்கியன் எம்பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு செயலகம் என்ற செயலகம் இல்லை. அத்துடன் இது விடயத்தில் கடந்த கால ஜனாதிபதிகள், இது பற்றி முஸ்லிம் தரப்புகளுடன் பேசாமல் எத்தகைய தீர்வுக்கும் வரமுடியாது என்றே சொல்லியுள்ளனர்.
2020ம் ஆண்டு பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் கருணா இக்கோரிகையை முன் வைத்த போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட உலமா கட்சித்தலைவர் இது சம்பந்தமாக முஸ்லிம்களின் கருத்தை கேட்காமல் முடிவுக்கு வரவேண்டாம் என தெரிவித்ததை மஹிந்த ராஜபக்ஷா ஏற்றிருந்தார்.
இத்தனைக்கும் மஹிந்தவுக்கு எந்த தேர்தலிலும் கல்முனை முஸ்லிம்களில் 20 வீதத்துக்கு மேல் ஓட்டு போட்டதில்லை.
அது போல் பெசில் ராஜபக்ஷ அமைச்சராக இருந்த போது இது சம்பந்தமாக பேச தமிழ் எம்பீக்கள் முற்பட்ட போது அது பற்றி பேச வேண்டாம் என அவர் உறுதிபட கூறியிருந்தார்.
இந்த பொது தேர்தலில் NPPக்கு கல்முனைத்தொகுதி முஸ்லிம்களில் 70 வீதமானோர் ஓட்டு போட்டதுடன் கல்முனை தொகுதியை NPP கைப்பற்ற உலமா கட்சி உட்பட பலரும் உதவியுள்ளனர்.
ஆகவே கல்முனையை வடக்கு கிழக்கு என்றோ, தமிழ் செயலகம், முஸ்லிம் செயலகம் என்றோ இன ரீதியில் பிரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.
முபாறக் முப்தி
உலமா கட்சி.
ஊடக பேச்சாளர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment