BREAKING NEWS

வாக்காளர் இடாப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்

நாடளாவிய ரீதியில் வாக்காளர் இடாப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல் வாக்காளர் பதிவேட்டின் விரிவாக்கத்திற்கு பங்களித்த 42 கிராம அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காகிதத்தில் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, ஆன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாக்காளர் பதிவேடு தயாரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar