கொள்கலன்கள் என்னுடையதல்ல .. ஆளுநர் ஹனிப் யூஸுப் தெரிவிப்பு
Posted by aljazeeralanka.com on January 30, 2025 in | Comments : 0
சோதனை செய்யாமல் வெளியேற்றப்பட்ட கொள்கலன்கள் என்னுடையதல்ல ..
ஆளுநர் ஹனிப் யூஸுப் தெரிவிப்பு
323 கன்டெய்னர்களை சோதனையின்றி சுங்கத்திலிருந்து விடுவித்தமை தொடர்பாக தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுப்பதாக மேல் மாகாண ஆளுநர் .ஹனிப் யூஸுப் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்கலன்களை விடுவித்தமைக்கும் தனக்கும் தொடர்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கொள்கலன்கள் எக்ஸ்போ லங்கா நிறுவனத்திற்கு சொந்தமானது என பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், குறித்த நிறுவனத்துடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுநராக பதவியேற்க குறித்த நிறுவனத்தை விட்டு வெளியேறியதாகக் கூறும் அவர், குற்றச்சாட்டுக்களால் வருத்தமடைவதாகவும் கூறுகிறார்.
நாட்டுக்கு சேவை செய்யும் நோக்கில் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தான் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டதாக அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.
இந்த கொள்கலன்கள் எக்ஸ்போ லங்கா நிறுவனத்திற்கு சொந்தமானது என பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்,குறித்த நிறுவனத்துடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment