மஹிந்த ராஜபக்ஷவை திடீரென சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
Posted by aljazeeralanka.com on February 07, 2025 in | Comments : 0
🟥 *மஹிந்த ராஜபக்ஷவை திடீரென சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,*
-------------------------------------------------
🟥 *இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையிலான திடீர் சிநேகபூர்வ சந்திப்பொன்று கடந்த 05 ம் திகதி காலை கொழும்பு விஜேராம மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.*
🟥 *முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவும் இலங்கையும் இருந்த உறவை ஒரு வரலாறாக ஞாபகப்படுத்திய இந்திய உயரிஸ்தானிகர், மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்தாலும் அதிகாரம் இல்லாமல் இருந்தாலும் அந்த உறவு என்றும் தொடரும் என அவர் உறுதியளித்தார்.*
🟥 *இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அண்டை மாநிலமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான நற்பு, மத, கலாச்சார மற்றும் சமூக உறவுகளை இரு தலைவர்களும் மரியாதையுடன் நினைவு கூர்ந்தன.*
...
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment