BREAKING NEWS

ஜனாசா எரிப்பு . ரணில் அரசுக்கு ஒத்துழைக்காத‌ ஹ‌க்கீம் இப்போது உள‌ர‌ல்.

ஜனாசா எரிப்பு . ரணில் அரசுக்கு ஒத்துழைக்காத‌ ஹ‌க்கீம் இப்போது உள‌ர‌ல். -------------------------- 1. பலவந்தமாக ஜனாசாக்கள் எரிக்கப்பட்டமை தவறு என்று ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் வைத்து பகிரங்க மன்னிப்புக் கேட்டது 2. பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாசாக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, விபரங்கள் சேகரிக்கப்பட்டது 3. பலவந்த ஜனாசா எரிப்பு தொடர்பில் அரசாங்கத்தையும், பொதுமக்களையும் பிழையாக வழிநடத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. 4. எரிக்கப்பட்ட ஜனாசாக்கள் தொடா்பான விபரங்களை நாடாளுமன்றத்தில் வௌியிடுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, விபரங்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 5. இனிவரும் காலங்களில் இப்படியான அநீதிகள் இடம்பெறாத வகையில் சட்டத்திருத்தமொன்றை முன்வைக்க நீதியமைச்சர் அலி சப்ரிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. 6. அதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, குறித்த சட்டமூல வரைபை முன்வைப்பது தொடர்பில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. அப்போது ர‌வூப் ஹ‌க்கீம் ர‌ணில் அர‌சின் மேற்ப‌டி ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ஒத்துழைக்க‌வுமில்லை, ஆலோச‌னை சொல்ல‌வுமில்லை. மாறாக‌ ர‌ணில் இவ்வாறு செய‌ற்ப‌டுவ‌த‌ற்கு உத‌விய‌ அவ‌ர‌து எம்பிமாரை ஏசுவ‌தில்தான் கால‌ம் க‌டத்தினார். இப்போது இந்த அர‌சை பார்த்து துள்ளிக்குதிக்கிறார், விம‌ர்சிக்கிறார். க‌ட‌ந்த‌ அர‌சில் ர‌ணிலை குறை கூறித்திரிந்தார். இப்போது இந்த‌ அர‌சை குறை கூறுகிறார். குறை கூறுவ‌த‌ற்கென்றே பாராளும‌ன்ற‌ ச‌ம்ப‌ள‌ம் பெறுகிறார். ச‌ந்த‌ர்ப்ப‌த்தை த‌வ‌ற‌ விட்டு விட்டு புல‌ம்பித்திரிவ‌து ஹ‌க்கீமின் தொட‌ர் முட்டாள்த‌ன‌ம். முபாற‌க் முப்தி உல‌மா க‌ட்சி

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar