கல்முனை உப செயலகம். தமிழ் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரசினதும் பிச்சைக்கார புண்.
Posted by aljazeeralanka.com on March 05, 2025 in | Comments : 0
கல்முனை உப செயலகம்.
தமிழ் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரசினதும் பிச்சைக்கார புண்.
கோடீஸ்வரன் ஏற்கனவே எம்பியாக இருந்த போதும் இது பற்றி எவ்வளவு கத்தியும் எதுவும் நடக்காமல் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்தார்.
இப்போது மீண்டும் தமிழ் மக்களை உசுப்பேற்ற அதே பிச்சைக்கார புண்ணை சீண்டுகிறார்.
அதே போல் அரசாங்கத்தில் கெபினட் அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீமும், ரிசாதும் இதை அமைச்சரவையில் பேசி தீர்த்திருக்கலாம்.
அமைச்சரவைக்கூட்டத்தில் கோடீஸ்வரனோ வேறு எதிர்க்கட்சி எம்பியோ கலந்து கொள்ள முடியாது. ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் மட்டும்தான். மிக அழகாக பேசி இரவோடிரவாக கல்முனையை மூன்று சபையாக, பிரித்திருக்கலாம், அல்லது பாண்டிருப்பு செயலகம் என்ற ஒன்றை வழங்கியிருக்கலாம்.
முட்டாள் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் குந்தியிருந்து சாப்பிட்டு உண்டி கொளுத்து வண்டி வைத்ததுதான் மிச்சம்.
அமைச்சரவை கூட்டம் வாரத்தில் ஒரு நாள் நடக்கும். வருடத்தில் எத்தனை நாள்? சமுகம் கணக்கு பார்த்ததா? பார்த்திருந்தால் எவனும் அவரது கட்சிக்கு ஓட்டு போட்டிருக்க மாட்டான்.
இந்த பிச்சைக்கார புண் பற்றி கோடீஸ்வரனும் ஹக்கீமும் தமக்குள் பேசிக்கொண்டபின்தான் பாராளுமன்றில் பேசுகிறார்கள் போல் உள்ளது.
நான் பேசி கல்முனை தமிழரை உசுப்பேற்றுகிறேன், நீ பேசி கல்முனை முஸ்லிம்களை வழமை போல் உசார் மடையர்களாக்கு என பேசியிருப்பர்.
ஹக்கீம் ஒரு நயவஞ்சகன், சமூக துரோகி என்பதை முஸ்லிம்கள் புரியும் வரை கல்முனைக்கு ஆபத்து தொடரும்.
முபாறக் முப்தி
உலமா கட்சி
ஸ்ரீல. ஐக்கிய காங்கிரஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment